ராஜீவ் காந்தி கொலை குற்றவாளிகள் உச்ச நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்ட நிலையில் அவர்களை மீண்டும் இலங்கைக்கு அனுப்புவதில் சிக்கல் ஏற்பட்டதால் அவர்கள் அனைவரும் திருச்சி சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டனர்.
அவர்களில் சாந்தன் உடல் நலக்குறைவை ஏற்பட்டு சில மாற்றங்களுக்கு முன்பு உயிரிழந்த நிலையில் திருச்சி சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டுள்ளவர்கள் தங்களை மீண்டும் இலங்கைக்கு அனுப்பி வைக்க வேண்டும் எனவும் அதற்கான ஏற்பாடுகளை மத்திய மாநில அரசுகள் மேற்கொள்ள வேண்டும் எனவும் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர்.
அந்த மனு விசாரணைக்கு வந்தபோது கொலை குற்றவாளிகள் விடுவிக்கப்பட்ட பிறகு இலங்கைக்கு அனுப்புவதில் என்ன தயக்கமென சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பி இருந்தது.
மேலும் இந்த விவகாரத்தில் தமிழக அரசு பதிலளிக்க வேண்டும் எனவும் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இந்த வழக்கை இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது முருகன், ஜெயக்குமார், ராபர்ட் பையஸ்க்கு இலங்கை துணை தூதரகம் பாஸ்போர்ட் வழங்கியுள்ளதாகவும் ஒரு வாரத்திற்குள் மூவரும் இலங்கைக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள் எனவும் தமிழக அரசு பதில் மனு தாக்கல் செய்துள்ளது.
செய்தி: க.சண்முகவடிவேல்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“