அதிமுக ஆட்சியின் ஊழல்கள்; பாமக-வின் மனு மீது தேவையான நடவடிக்கை எடுக்கப்படும் – தமிழக அரசு

TN govt says will take action against PMK compliant on ADMK regime’s corruption: அதிமுக ஆட்சியில் நடைபெற்ற ஊழல்கள் குறித்து பாமக ஆளுநரிடம் அளித்த மனு குறித்து தேவையான நடவடிக்கைகள் எடுப்பதாக தமிழக அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் பதில்

பாட்டாளி மக்கள் கட்சி, 2015 ஆம் ஆண்டில் ஆளுநரிடம் அளித்த ஊழல் புகார் பட்டியலின் அடிப்படையில், நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

கடந்த, 2015 பிப்ரவரி 17 அன்று பாட்டாளி மக்கள் கட்சி, அப்போதைய அண்ணா திராவிட முன்னேற்ற கழக ஆட்சியின் மீது ஊழல் குற்றச்சாட்டுகளை முன்வைத்து, அவர்கள் மீது நடவடிக்கை எடுக்ககோரி ஆளுநரிடம் மனு அளித்தது. அந்த மனுவில், கிரானைட் கொள்ளை, கடற்கரை மணல் கொள்ளை, மின்சாரம் வாங்குவதில் ஊழல், ஆற்று மணல் கொள்ளை, மதுபான விற்பனை உள்ளிட்ட 18 ஊழல் குற்றச்சாட்டுகளை அப்போதைய அதிமுக அரசு மீது சுமத்தியிருந்தது.

இந்த நிலையில் கடந்த 2015 ஆண்டு பாமக தலைவர் ஜி.கே.மணி தாக்கல் செய்த ரிட் மனு, நீதிபதி ஆர்.மகாதேவன் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது ஆஜரான தமிழக அரசு வழக்கறிஞர் ஆர். சண்முகசுந்தரம், பாமக அளித்த ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்த கோரிக்கை மனுவை ஆளுநர் தமிழக அரசுக்கு அனுப்பியுள்ளார். மேலும் அந்த மனு மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து அறிக்கையையும் கேட்டுள்ளார். கூடுதலாக, பாமக அப்போது அதிமுக அரசு மீது சுமத்திய குற்றச்சாட்டுகள் குறித்து தற்போது அந்தக் கட்சியின் நிலைப்பாட்டை அறிந்துக் கொள்ளவும் வலியுறுத்தியுள்ளார். தற்போது, அந்த மனுவின் நகல்கள் சம்பந்தப்பட்ட அரசு துறைகளுக்கு சரிப்பார்ப்புக்காக அனுப்பப்பட்டுள்ளது.

மேலும், “தற்போதைய அரசாங்கம் இந்த பிரச்சினையைத் தொடர்கிறது என்றும் சட்டப்படி தேவையான நடவடிக்கை எடுக்கப்படும்” என்றும் அரசு வழக்கறிஞர் கூறினார். அவரது சமர்ப்பிப்புகளில் நம்பிக்கை கொண்ட நீதிபதி, அவற்றை பதிவுசெய்து, பாமக அளித்த மனு மீது நடவடிக்கை எடுக்க கோரி ஆளுநரின் செயலகத்திற்கு வழிநடத்தக் கோரிய ரிட் மனுவை நீதிபதி முடித்து வைத்தார். பாமக அளித்த மனு அடிப்படையில் எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்த தகவல்களை வெளியிட அரசு வழக்குரைஞர் இடைக்கால தடையையும் கோரியிருந்தார்.

தனது வழக்கை ஆதரித்து தாக்கல் செய்யப்பட்ட வாக்குமூலத்தில், ஐ.ஏ.எஸ் அதிகாரி உ.சகாயம், மதுரையில் உள்ள கிரானைட் சுரங்க மாஃபியா, சட்டவிரோத சுரங்கங்களின் மூலம் பொதுக் கருவூலத்திற்கு சுமார் ரூ.5 லட்சம் கோடி இழப்பை ஏற்படுத்தியதாக மதிப்பிட்டுள்ளதாக ஜி.கே.மணி கூறினார். இதேபோல், தூத்துக்குடி மாவட்டத்தில் சட்டவிரோத கடற்கரை மணல் கொள்ளையால் அரசுக்கு ஏற்பட்ட இழப்பு ரூ.1 லட்சம் கோடி எனவும், மேலும் மாநிலத்தில் ஆற்று மணல் கொள்ளையில் ரூ.15,000 கோடி அளவுக்கு ஊழல் நடந்துள்ளதாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.

“ஊழல் கறைபடிந்த முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதா தலைமையிலான ஆட்சியில் மின்சாரக் கொள்முதலிலும் ஊழல் நடந்துள்ளது. ஒரு யூனிட் மின்சாரம் ரூ.2.94 முதல் ரூ.3.85 வரை கிடைக்கக்கூடிய நிலையில், அதிமுக அரசு ரூ.15.14 க்கு வாங்கியுள்ளது. இப்படியாக, மொத்தம் 798 மில்லியன் யூனிட்டுகள் ரூ. 1,208 கோடிக்கு வாங்கப்பட்டுள்ளது, இதன் மூலம் 900 கோடி ரூபாய் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது என்று ஜி.கே.மணி குற்றம் சாட்டியுள்ளார்.

அதிமுக ஆட்சியில் ஊழல் அனைத்து துறைகளிலும் பரவலாக இருப்பதாகவும், பள்ளி மாணவர்களுக்கு சத்தான உணவை வழங்குவதற்காக முட்டை வாங்குவதில் கூட அரசாங்கம் ஊழல் செய்துள்ளது என்றும், மேலும், பாலில் கலப்படம் செய்வதிலும் ஈடுபட்டதாகவும் பாமக தலைவர் ஜி.கே.மணி கூறினார்.

“அதிமுக அரசாங்கம் வெட்கமின்றி மதுபானம் விற்பனை செய்வது வருவதாகவும்,” ஏனெனில் ஆளும் கட்சியைச் சேர்ந்தவர்கள் மதுக்கடைகளை நடத்தி வருவதாகவும், அங்கு மோசமான மதுபானங்களை விற்பனை செய்வதாகவும் ஜி.கே.மணி குற்றம் சாட்டினார். இவ்வாறு பாமக தலைவர் தனது மனுவில் அப்போதைய அதிமுக அரசில் நடைபெற்ற ஊழல்கள் குறித்து பட்டியலிட்டிருந்தார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Tamilnadu news here. You can also read all the Tamilnadu news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Tn govt says will take action against pmk compliant on admk regimes corruption

Next Story
சர்ச்சை பேச்சு : பாதிரியார் ஜார்ஜ் பொன்னையா கைதுkanyakumari christian father controversy speech, கன்னியாகுமரி, கிறிஸ்தவ பாதிரியார், பாதிரியார் சர்ச்சை பேச்சு, பாதிரியார் மன்னிப்பு, பாஜக, தமிழ்நாடு, kanyakumari christian priest controversy speech, kanyakumari, bjp, tamil nadu
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com