மத்திய தொகுப்பில் இருந்து தமிழக குடும்ப அட்டைதாரர்களுக்கு அளிக்கப்படும் கொண்டைக் கடலைக்கு பதிலாக துவரம் பருப்பு வழங்க வேண்டும் என்று தமிழக அரசு கோரிக்கை வைத்தது. ஆனால், அதற்கு மத்திய அரசு இணங்காததால், கொரோனா நிவாரணமாக தமிழகத்தில் டிசம்பர் மாதம் குடும்ப அட்டைதாரர்களுக்கு 5 கிலோ கொண்டைக்கடலை மற்றும் 1 கிலோ துவரம் பருப்பு இலவசமாக வழங்கப்பட உள்ளது.
அந்தியோதயா அண்ணா யோஜனா (ஏ.ஏ.ஒய்) மற்றும் முன்னுரிமை குடும்ப அட்டைதாரர்கள் (பிஹெச்ஹெச்) திட்டத்தில் தேசிய உணவு பாதுகாப்புச் சட்டத்தின் (என்.எஃப்.எஸ்.ஏ) பயனாளிகளாக மொத்தம் ஒரு கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கு 5 கிலோ கொண்டைக்கடலை வழங்கப்படும். 97.9 லட்சம் முன்னுரிமை இல்லாத குடும்ப அட்டைதாரர்களுக்கு அங்கம் வகிப்பவர்களுக்கு 1 கிலோ துவரம் பருப்பு வழங்கப்படும்.
முதல்வர் பழனிசாமி ஜூலை 1ம் தேதி பிரதமர் நரேந்திர மோடிக்கு எழுதிய கடிதத்தில், கொண்டைக் கடலைக்கு பதிலாக பதப்படுத்தப்பட்ட துவரம்பருப்பு வழங்கப்பட வேண்டும் என்று கோரினார். இதற்கு காரணம் என்னவென்றால், தமிழ்நாடு துவரம் பருப்பை விரும்புகிறது என்பதுதான் காரணம். முதல்வர் பழனிசாமி இந்த நிலையை மீண்டும் வலியுறுத்தி பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதினார். அதில், தமிழ்நாட்டுக்கு துவரம் பருப்பு அல்லது பதப்படுத்தப்படாத துவரம்பருப்பு ஒதுக்குமாறு கோரினார். ஆனால், அப்போது மத்திய உணவுத் துறை அமைச்சராக இருந்த ராம் விலாஸ் பாஸ்வான், மத்திய இருப்பாக குறைந்த அளவில் துவரம் பருப்பு இருப்பதால் அரைக்கப்பட்ட சுத்தம் செய்யப்பட்ட முழு கொண்டைக் கடலையை மாநில அரசு ஏற்றுக்கொள்ளுமாறு கூறப்பட்டது. மீண்டும், ஒதுக்கப்பட்ட 55,540 டன் கொண்டைக் கடலையை மாநில அரசு அட்டைதாரர்களிடையே பாகுபாடு காட்ட விரும்பாததால், அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் சமமாக விநியோகிக்க அனுமதி கோரியது. அதற்கு, மத்திய அரசு பி.எம்.ஜி.கே.ஏ.ஒய் திட்ட விதிமுறைகளுடன் இதுபோன்ற நடவடிக்கைகள் பொருந்தாது என்று கூறியது. அதனால்தான், அனைத்து அட்டைதாரர்களுக்கும் 1 கிலோ துவரம் பருப்பு இலவசமாக வழங்க மாநில அரசு முடிவு செய்தது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil ”
Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the Tamilnadu News by following us on Twitter and Facebook
Web Title:Tn govt select cardholders to distribute 5 kg of chana free as covid 19 relief