Advertisment

ஆசிரியர்கள்- தமிழக அரசு இடையே பிரிவினையை உருவாக்க சிலர் முயற்சி: அமைச்சர் அன்பில் மகேஷ்

பள்ளிக் கல்வித் துறையின் சாதனைகளுக்கு ஒரு திருஷ்டி மாறி கடந்த சில நாட்களுக்கு முன் நடைபெற்ற நிகழ்வு அமைந்துவிட்டது. இது போராட்டம் அல்ல ஆசிரியரின் உணர்வுகளின் வெளிப்பாடு- அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி

author-image
WebDesk
New Update
Anbil Tri.jpg

திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள கலையரங்கம் திருமண மண்டபத்தில் நேற்று (அக்.7) 'ஆசிரியர்களுடன் அன்பில்' என்னும் நிகழ்ச்சி பள்ளி கல்வித் துறை சார்பாக நடைபெற்றது.

இவ்விழாவில் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு, பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார், அதிகாரிகள், ஆசிரியர்கள் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினர்.

Advertisment

விழாவில் சக ஆசிரியர்களை கொண்டாடுவோம் புத்தகம் வெளியிடப்பட்டது. இதையடுத்து, விழா அரங்கில் வைக்கப்பட்டிருந்த ஆசிரியர் மனசு பெட்டியை அமைச்சர்கள் திறந்து அதில் பெறப்பட்ட கோரிக்கைகளை கொண்ட மனுக்களை திறந்து பார்த்து உடனடியாக நிறைவேற்றக் கூடியவைகளை சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் கொடுத்து பரிசீலிக்க சொன்னார்கள். 

பின்னர், நகர்புர வளர்ச்சித் துறை அமைச்சர் கே.என். நேரு பேசுகையில், "எனக்கு முன்னதாக பேசிய மாவட்ட ஆட்சியர் கெமிக்கல் இன்ஜினியரிங் எடுத்து படிப்பதற்கு ஆசிரியர்கள் காரணம் என அவர் குறிப்பிட்டார்.

ஆனால் அவர் நார்த்து போல் (North poll) என்றால் நான் சவுத் போல் (south poll) அவருக்கு நேர்மாறாக உள்ளவன். அனைத்து வகுப்புகளை கிளாஸ் டீச்சர் கவனிப்பார். ஆனால் என்னை காவல் காக்க நான்கு ஆசிரியர்கள் இருந்தனர்.

ஸ்ரீரங்கத்தில், திருச்சியில் படித்த பொழுதும் சரி, ஜமால் முகமது கல்லூரியில் படித்த பொழுதும் சரி, அனைவரும் என்னையே கண்காணித்துக் கொண்டிருப்பார்கள், 5 நிமிடம் கூட தனியாக என்னை விடாத அளவுக்கு உற்று நோக்குவார்கள் ஆசிரியர்கள். 

Anbil Tri 1.jpg

பள்ளி கல்வித் துறையை மிக நேர்த்தியாக நடத்திக் கொண்டிருக்கும் அமைச்சர் தம்பி மகேஸ்க்கு வாழ்த்துக்கள். ஒரு இலாகா வெற்றி பெறுவது அவ்வளவு எளிதான காரியம் அல்ல. இலாகாவை நடத்துவதில் அமைச்சர் திறமை இல்லை என்றால் வெற்றி பெற முடியாது . அமைச்சர் மகேஸ் திறமையாக நேர்த்தியாக சிறப்பாக பணியாற்றி வருகிறார். நாங்க எல்லாம் ஜெயிச்சதுக்கு முக்கிய காரணம் நீங்கள் தான் (ஆசிரியர்கள்) என்பது எங்களுக்கு தெரியும்.  எல்லாவற்றையும் நான் இங்கே கூறினால் பேப்பர் காரர்கள் எல்லாத்தையும் எழுதி விடுவார்கள்.

கண்டிப்பாக உங்கள் உழைப்பு வீண் போகாது தலைவர் முதல்வர் உங்களுடன் எப்போதும் இருப்பார். நான் பியூசி வரை படித்தவன். ஆனால் நான் படிக்க முடியாவிட்டாலும் என் தம்பி, தங்கைகளை பி.ஜி முதுகலை பட்டங்களை படிக்க வைத்தேன். இன்ஜினியரிங் கல்லூரியில் என் தம்பியை சேர்க்க சென்ற பொழுது அப்பொழுது எம்.ஜி.ஆர் முதல்வர். தி.மு.ககாரன் நீ எங்க இங்க வந்த என கேட்டு விரட்டப்பட்டவன். அதற்காகவே நான் ஒரு கல்லூரியை ஆரம்பித்து அதன் மூலம் வழக்குகளை சந்தித்து சிறைக்கு சென்றவன். கல்வி கற்பதற்கு காலம் கடந்து விட்டது. 

Anbil Tri 2.jpg

திமுகவும் தமிழக அரசும் என்றும் ஆசிரியர்களுக்கு உறுதுணையாக இருக்கும். ஆசிரியர்களை மதிப்பவர்கள் தான் என்றும் வளரும் முடியும். எங்களை நம்பி ஆசிரியர்கள் இந்தப் போராட்டத்தை கைவிட்டு உள்ளனர் மகிழ்ச்சி. நான்கு நாட்களாக தம்பி மகேஸ் முகத்தில் சிரிப்பு கூட ஏற்படவில்லை. முதல்வர் உடன் காரில் சென்ற போது கூட இறுதியாக ஒரு சங்கம் போராட்டத்தை கைவிட்டது என்று சொன்ன பொழுது காரிலேயே குதித்தார். முதல்வரிடம் சொன்னபோது வாக்குறுதிகளை கொடுத்துள்ளோம் அதை நிறைவேற்ற வேண்டும் என்று முதல்வர் குறிப்பிட்டார் என்றார். கண்டிப்பாக வாக்குறுதிகளை தம்பி மகேஸ் முதல்வரிடம் கூறி நிறைவேற்றி தருவார். 

Anbil Tri 3.jpg

மேலும் உங்களுடைய வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட முடியாமல் இருப்பதற்கு பத்து ஆண்டு காலமாக அவர்கள் (அதிமுக) ஏகப்பட்ட சிக்கலை செய்துவிட்டு சென்று விட்டார்கள். கஜானாவில் பணம் இழுத்துக் கொண்டிருக்கிறது அதனால் சிரமப்படுகிறோம் என குறிப்பிட்டார். நானும் கூட என் துறை அதிகாரிகளை வைத்து இது போன்ற ஒரு கூட்டம் நடத்தலாம் என யோசித்தேன். நீங்களாவது அமர்ந்து கேட்டுக் கொண்டு உள்ளீர்கள். என் துறையில் உள்ள அதிகாரிகள் எப்படி இருப்பார்கள் என்பதை சொல்ல முடியாது" என சிரித்துக்கொண்டே தனது பேச்சை முடித்தார் அமைச்சர் கே.என்.நேரு.

தொடர்ந்து, நிகழ்ச்சியில் பேசிய துறையின் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, "தமிழக அரசின் பள்ளிக் கல்வித் துறை சிறப்பாக செயல்பட்டு வருகிறது என அனைத்துத் தரப்பினரும் பாராட்டி வந்த வேளையில், ஆசிரியர்கள் போராட்ட நிகழ்வு நடைபெற்றது.  இதற்கு விளக்கமளிக்க இந்த கூட்டத்தை பயன்படுத்திக்கொள்கிறேன். பள்ளி கல்வித்துறை அமைச்சராக உள்ள அனுபவம் எனக்கு 29 மாதங்கள் மட்டுமே. ஆனால் வாழ்க்கையின் பாதி நாட்களுக்கு மேல் பள்ளி கல்லூரிகளில் பயின்ற அனுபவம் எனக்கு உண்டு. அதனால் ஆசிரியர்களின் ஏக்கத்தை என்னால் உணர முடிகிறது. 

Anbil Tri 4.jpg

பள்ளிக் கல்வித் துறையின் சாதனைகளுக்கு ஒரு திருஷ்டி மாறி கடந்த சில நாட்களுக்கு முன் நடைபெற்ற  நிகழ்வு அமைந்துவிட்டது. இது போராட்டம் அல்ல ஆசிரியரின் உணர்வுகளின் வெளிப்பாடு. ஆசிரியர்கள்- அரசு இடையே நுழைந்து நம்மை பிரிக்க நினைப்பவர்களுக்கு ஒரே பதில் கூற வேண்டும். அடித்தாலும் பிடித்துக் கொண்டாலும் இது அண்ணன்- தம்பி உறவுகள்.  எமிசிலிருந்து ஆசிரியர்களை விடுவிக்க பணிகள் தொடங்கி விட்டன. அரசு மீது ஆசிரியர்கள் நம்பிக்கை வைக்க வேண்டும். பள்ளிக் கல்வித் துறை அறிவித்த 53 திட்டங்கள் வெற்றிகரமாக செயல்படுத்தப்படுவதற்கு ஆசிரியர்கள்தான் காரணம். ஆசிரியர்களின் போராட்டத்தை தவறாக நினைக்கவில்லை. ஆசிரியர்களின் கோரிக்கையில் நியாயம் இருப்பதாக நினைக்கிறேன். 

Anbil Tri 5.jpg

ஆசிரியர்கள் தங்களை வருத்திக் கொண்டு போராட்டத்தில் ஈடுபட வேண்டாம். ஆசிரியர்களும், பள்ளிக் கல்வித் துறையும் உறவினர் போன்றவர்கள். போராட்டங்களால் பல்வேறு விமர்சனங்களை முன்வைத்தாலும், ஆசிரியர்களுக்கு வேண்டியதை செய்வது தி.மு.க. ஆட்சியில் தான்" என்று அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேசினார். இந்த நிகழ்ச்சியில் பள்ளிக் கல்வித் துறை செயலாளர், துறை சார்ந்த அதிகாரிகள், சமூக ஆர்வலர்கள் என  500க்கும் மேற்பட்டவர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

 செய்தி: க.சண்முகவடிவேல்

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Trichy
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment