படித்து முடித்துவிட்டு பல்வேறு கிராமங்கள், ஊர்களில் இருந்து பணி புரிவதற்காக வெளி மாவட்டங்களுக்கு வரும் பெண்கள் பாதுகாப்பாக தங்குவதற்கு பல்வேறு வசதிகளுடன் தமிழக அரசின் சார்பில் மாநிலம் முழுவதும் குறைந்த கட்டணத்தில் பிரத்யேக மகளிர் விடுதிகள் தொடங்கப்பட்டுள்ளன.
தமிழக அரசின் 'தமிழ்நாடு பணிபுரியும் மகளிர் விடுதிகள் நிறுவனம்' சார்பில் இந்த முன்னெடுப்பு தொடங்கப்பட்டு உள்ளது. பல்வேறு அடிப்படைத் தேவைகளோடு பாதுகாப்பு அம்சங்களும் நிறைந்த இந்த விடுதிகளில் மாத அடிப்படையிலும் நாள் கணக்கிலும் பெண்கள் தங்கலாம்.
இந்நிலையில், சமூக நலத்துறை மற்றும் பெண்கள் அதிகாரமளித்தல் துறையின் கீழ் இயங்கும் ஆறு விடுதிகளை, தமிழ்நாடு பணிபுரியும் மகளிர் விடுதிகள் கழகம் கையகப்படுத்த உள்ளது.
இத்திட்டத்திற்கு ரூ.1 கோடி ஒதுக்கப்பட்டு, மதுரை, திருப்பூர், தூத்துக்குடி, திருவள்ளூர், புதுக்கோட்டை, கோவை ஆகிய இடங்களில் உள்ள 6 தங்கும் விடுதிகள் வைஃபை, பயோமெட்ரிக் அமைப்பு போன்ற வசதிகளுடன் புதுப்பிக்கப்படும். போதிய பாதுகாப்பு பணியாளர்கள் மற்றும் விடுதி மேலாளர்கள் நியமிக்கப்படுவார்கள். இந்த ஆறு விடுதிகளும் தோழி விடுதிகளாக மீண்டும் திறக்கப்படும், என்று சமூக நலத்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
1980 ஆம் ஆண்டு அமைக்கப்பட்ட 21 பணிபுரியும் மகளிர் விடுதிகளை அரசு நடத்துகிறது, இவற்றில் 10 விடுதிகள் ஏற்கனவே சென்னை, செங்கல்பட்டு, சேலம், திருச்சி, திருநெல்வேலி, வேலூர், விழுப்புரம், பெரம்பலூர் மற்றும் தஞ்சாவூரில் தோழி விடுதிகளாக மாற்றப்பட்டுள்ளன.
மாநிலம் முழுவதும் உள்ள தோழி விடுதிகளில் உள்ள 1,140 படுக்கைகளில் 950 படுக்கைகள் ஆக்கிரமிக்கப்பட்ட நிலையில், தேவை அதிகரித்து வருவதாக அதிகாரி மேலும் கூறினார்.
எனினும், தோழி விடுதியில் வசிப்பவர்கள் திடீரென வாடகை உயர்த்தப்பட்டதால், தங்களுக்கு சிரமம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
வாடகை உயர்வு தொடர்பாக எங்களுக்கு நோட்டீஸ் வழங்கப்படவில்லை. ஜூன் 27 அன்று திருத்தப்பட்ட கட்டணத்துடன் ஒரு PDF மட்டுமே பகிரப்பட்டது, இது ஜூலை 1 முதல் நடைமுறைக்கு வந்தது. கருத்து எதுவும் எடுக்கப்படவில்லை,
முந்தைய வாடகை ரூ.6,500 இப்போது ரூ.6,850 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. மைக்ரோவேவ் அல்லது கெட்டில் போன்ற கூடுதல் வசதிகள் எதுவும் வழங்கப்படவில்லை. எனவே, வாடகை உயர்வு நியாயமில்லை. எங்களில் பெரும்பாலானோர் பிற மாவட்டங்களை சேர்ந்தவர்கள் என்பதால் கூடுதல் செலவுக்கு நாங்கள் தயாராக இல்லை, என்று அடையாறு, கூடுவாஞ்சேரியில் தங்கும் விடுதியில் வசிப்பவர்கள் கூறுகின்றனர்.
ஆனால் விடுதிகள் ஓராண்டு நிறைவடைந்துவிட்டதாகவும், பராமரிப்புச் செலவுகளின் பணவீக்கம் காரணமாக வாடகை உயர்வு ஏற்பட்டதாகவும் விடுதி நிர்வாகம் தரப்பில் கூறப்படுகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.