பொங்கல் சிறப்பு பஸ்கள்: சென்னையில் 5 இடங்களில் இருந்து இயக்க ஏற்பாடு

கோயம்பேட்டில் பயணிகளுக்கு உதவுவதற்காக 9445014450 மற்றும் 9445014436 ஆகிய எண்களுடன் 24 மணி நேரமும் இயங்கும் கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டுள்ளது.

pongal special bus stand in chennai
TN Govt to operate 16768 special buses for Pongal from chennai

நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு எழுச்சிக்கு மத்தியில், தமிழ்நாடு அரசாங்கம் ஊரடங்கு கட்டுப்பாடுகளை ஜனவரி 31, 2022 வரை நீட்டித்துள்ளது, அதே நேரத்தில் ஜனவரி 16 ஆம் தேதி முழுமையான ஊரடங்கையும் அறிவித்துள்ளது.

ஜனவரி 14 முதல் ஜனவரி 18 வரை மக்கள், எந்த வழிபாட்டுத் தலங்களுக்கும் செல்ல தடைவிதிக்கப்பட்டுள்ளது. மேலும் பொங்கலுக்காக மாவட்டங்களுக்கு இடையேயான சிறப்பு பேருந்துகள் 75%  மட்டுமே இயக்கப்பட உள்ளது.

அதன்படி, பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, தமிழ்நாடு போக்குவரத்துக் கழகங்கள் சார்பில்  இன்று முதல்(செவ்வாய்க்கிழமை) நகரில் உள்ள ஐந்து பேருந்து நிலையங்களில் இருந்து, பல்வேறு இடங்களுக்கு சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

மாநகரில் இருந்து 10,300 பேருந்துகள் உட்பட 16,768 பேருந்துகளும், மாநிலத்தின் பல்வேறு இடங்களுக்கு இடையே 6,468 பேருந்துகளும் இயக்கப்படும்.

சென்னையில், ஐந்து பேருந்து நிலையங்களில் இருந்து தினமும் 2,100 (ஜனவரி 11 முதல் 13 வரை 6,300 பேருந்துகள்) வழக்கமான பேருந்துகள் சேவையுடன் கூடுதலாக 4,000 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும்.

* அதன்படி மாதவரம், கே.கே.நகர், தாம்பரம் அறிஞர் அண்ணா பேருந்து நிலையங்களான MEPZ, பூந்தமல்லி மற்றும் கோயேம்பேடு ஆகிய இடங்களில் அமைந்துள்ள ஐந்து பேருந்து நிலையங்களில் இருந்து நீண்ட தூர பேருந்துகள் இயக்கப்படும்.

* கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து நாகப்பட்டினம், வேளாங்கண்ணி, திருச்சி, மதுரை, திருநெல்வேலி, சேலம் மற்றும் கோயம்புத்தூர் ஆகிய இடங்களுக்கு பேருந்துகள் இயக்கப்படும்.

* ரெட் ஹில்ஸ் வழியாக பொன்னேரி, கும்மிடிப்பூண்டி மற்றும் ஊத்தக்கோட்டைக்கு இயக்கப்படும் பேருந்துகள் மாதவரம் புதிய முனையத்தில் இருந்து இயக்கப்படும்.

* இசிஆர் வழியாக புதுச்சேரி, கடலூர் மற்றும் சிதம்பரத்திற்கு இயக்கப்படும் பேருந்துகள் கேகே நகர் முனையத்தில் இருந்து இயக்கப்படும்.

* தாம்பரம் MEPZ பேருந்து முனையத்தில் திண்டிவனம், திருவண்ணாமலை, விக்கிரவாண்டி, பண்ருட்டி மற்றும் கும்பகோணம் செல்லும் பேருந்துகள் இருக்கும்.

கோயம்பேட்டில் பயணிகளுக்கு உதவுவதற்காக 9445014450 மற்றும் 9445014436 ஆகிய எண்களுடன் 24 மணி நேரமும் இயங்கும் கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டுள்ளது.

மேலும்’ ஆம்னிபஸ்கள் அதிக கட்டணம் வசூலிக்கப்படுவது குறித்த புகார்களை 1800 425 61501 மற்றும் 24044051 மற்றும் 2404401 என்ற இலவச எண்கள் மூலம் பயணிகள் தெரிவிக்கலாம் என்று என்று மாநில போக்குவரத்துத் துறை தெரிவித்துள்ளது.

இதற்கிடையே, தெற்கு ஜிஎஸ்டி சாலையில் வடபழனி, அசோக் பில்லர், ஆலந்தூர் மற்றும் குரோம்பேட்டை போன்ற வழக்கமான பிக்-அப் பாயின்ட்களில் பயணிகளை ஏற்றிச் செல்ல வேண்டாம் என்று தனியார் பேருந்துகளுக்கு சென்னை நகர போக்குவரத்துக் காவல்துறை (சிசிடிபி) வேண்டுகோள் விடுத்துள்ளது.

கிழக்கு கடற்கரை சாலை (ECR) அல்லது பழைய மகாபலிபுரம் சாலை (OMR) வழியாக மற்ற மாவட்டங்களுக்கு பயணிகளை ஏற்றிச் செல்லும் பேருந்துகள் மட்டுமே கிண்டி அல்லது ஜிஎஸ்டி சாலை வழியே செல்ல அனுமதிக்கப்படும் என்றும் கூறியுள்ளது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Tamilnadu news here. You can also read all the Tamilnadu news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Tn govt to operate 16768 special buses for pongal from chennai

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com
Best of Express