பொங்கல் பண்டிகைக்கு ரேஷன் அட்டைதாரர்களுக்கு தமிழ்நாடு அரசால் வழங்கப்படும் பொங்கல் பரிசு குறித்த அறிவிப்பு எப்போது வெளியாகும் என்ற எதிர்ப்பார்ப்பு எழுந்த நிலையில், பொங்கல் பரிசு எப்போது அறிவிக்கப்படும் என்ற தகவல் வெளியாகி உள்ளது.
தமிழ்நாடு அரசு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பை வழங்குவது வழக்கம். அதன்படி, இந்த முறை பொங்கல் பண்டிகைக்கு இன்னும் ஒரு மாதம் உள்ள நிலையில், தமிழ்நாடு அரசு பொங்கல் பண்டிகைக்கு பரிசுத் தொகுப்பை எப்போது அறிவிக்கும் என்ற எதிர்பார்ப்புகள் பொதுமக்கள் இடையே எழுந்தன.
இந்த நிலையில், தமிழ்நாடு அரசு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, ரேஷன் அட்டை தாரர்களுக்கான பொங்கல் பரிசுத் தொகுப்பு குறித்த அறிவிப்பை நாளை (07.12.2022) வெளியிட திட்டமிட்டுள்ளது என்ற தகவல் வெளியாகி உள்ளது.
தமிழ்நாடு அரசு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, ரேஷன் அட்டை தாரர்களுக்கான பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்க உள்ளது. அதன்படி, ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கலுக்கு தலா ஒரு கிலோ பச்சரிசி, சர்க்கரை, ஆவின் நெய், ஆகியவற்றுடன் 1,000 ரூபாய் அடங்கிய பரிசுத் தொகுப்பை வழங்க தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ரேஷன் அட்டை தாரர்களின் வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்த அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் கசிந்துள்ளன. இந்த நிலையில், பொங்கல் பரிசுத் தொகுப்பு அறிவிப்பை தமிழக அரசு நாளை வெளியிட்ட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனால், தமிழக அரசின் பொங்கல் பரிசுத் தொகுப்பு அறிவிப்புக்காக பொதுமக்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"