/tamil-ie/media/media_files/uploads/2021/04/Chennai-COVID-19-1.jpg)
தமிழக அரசு, மாநிலத்திற்கு கூடுதலாக 15 லட்சம் கோவிஷீல்டு மற்றும் 5 லட்சம் கோவெக்சின் தடுப்புசிகளை வழங்கக் கோரி மத்திய அரசு கடிதம் எழுதியுள்ளது.
தமிழ்நாட்டில் புதன்கிழமை ஒரே நாளில் 7,819 கோவிட்-19 தொற்றுகள் பதிவாகியுள்ளன - செவ்வாய்க்கிழமை 6,984 தொற்றுகள் பதிவாகியுள்ளன - இதனால், அடுத்த இரண்டு வாரங்கள் முக்கியமானதாக இருக்கும் என்று மாநில சுகாதாரத்துறை செயலாளர் ஜே.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார். மேலும், இப்போதைக்கு முழு பொதுமுடக்கம் விதிப்பதற்கு மாநில அரசிடம் எந்த திட்டமும் இல்லை என்று கூறினார்.
“பொதுமுடக்கம் விதிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்ட மகாராஷ்டிராவில், ஒரு நாளைக்கு 60,000 தொற்றுகளும் சுமார் 5 லட்சம் தொற்று நோயாளிகள் சிகிச்சையிலும் உள்ளனர்” என்று தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் சுட்டிக்காட்டினார்.
தமிழ்நாட்டில் புதன்கிழமை வரை புதன்கிழமை நிலவரப்படி தமிழகத்தில் 54,315 தொற்று நோயாளிகள் சிகிச்சை பெற்றுவருகிற செயலில் உள்ள தொற்றுகள் என்று பதிவாகியுள்ளன.
மருத்துவ வசதிகள் நிலைமையைக் கையாளும் திறன் மற்றும் அத்தியாவசிய மருந்துகள் கையிருப்பில் உள்ள நிலையில், பொது அறிவிப்புகளைப் பயன்படுத்தி உள்ளூர் குழுக்களை அணிதிரட்டுவதன் மூலம் தடுப்பூசி இயக்கத்தை அதிகரிக்க அரசு மாநிலம் முழுவதும் பிரச்சாரங்களை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாநில அரசு மேலும் 6 லட்சம் மருந்துகளை மத்திய அரசிடம் கோரியுள்ளதாக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார். “அடுத்த இரண்டு வாரங்கள் எங்களுக்கு முக்கியமானதாக இருக்கும்” என்று அவர் கூறினார். “மாநிலத்தில் வாழ்க்கை இயல்பாக இருக்கிறது என்று பொதுவாக ஒரு எண்ணம் இருக்கலாம். ஆனால், அப்படி இல்லை. எனவே மக்கள் வெளியே செல்வதை நிறுத்த வேண்டும். தடுப்பூசி போடப்பட்டவர்களிடையே நோய்த்தொற்றின் தீவிரம் குறைவாக இருப்பதால், தடுப்பூசி எடுத்துக்கொள்ள அனைவரும் முன்வர வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.” என்று ராதாகிருஷ்ணன் கூறினார்.
மருத்துவமனை படுக்கை வசதி கட்டுப்பாட்டில் உள்ளது என்றும், கோவிட் தொற்று நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் பராமரிப்பு மையங்களின் திறனை அரசு விரிவுபடுத்துகிறது என்றும் அவர் கூறினார். “6,500க்கும் மேற்பட்ட வென்டிலேட்டர்கள் பயன்படுத்த தயாராக உள்ளன. எங்களிடம் 1.49 லட்சம் ரெம்டெசிவிர் உள்ளது” என்று ராதாகிருஷ்ணன் கூறினார்.
தமிழகத்தின் தலைநகரான சென்னையில் அதிகபட்ச எண்ணிக்கையில் தொற்றுகள் பதிவாகியுள்ளது. சென்னையில் புதன்கிழமை பதிவான 2,564 தொற்றுகள் உட்பட 18,000க்கும் மேற்பட்ட தொற்றுகள் செயலில் உள்ளதாக பதிவாகியுள்ளன. தேனாம்பேட்டை, அண்ணா நகர் போன்ற பகுதிகளில் தலா 2,000க்கும் மேற்பட்ட தொற்றுகள் செயலில் உள்ளதாக பதிவாகியுள்ளன.
கோடம்பாக்கம், ராயபுரம், திரு.வி.க. நகர் மற்றும் அடையாறு ஆகிய இடங்களில் தலா 1,000 க்கும் மேற்பட்ட தொற்றுகள் செயலில் உள்ளன.
பெரு நகர சென்னை மாநகராட்சி ஆணையர் ஜி.பிரகாஷ் கூறுகையில், சென்னையின் தடுப்பூசி விகிதம் சுமார் 40 முதல் 42 சதவீதம் வரை உள்ளது. சென்னையின் மக்கள்தொகையில் 45 வயதுக்கு மேற்பட்டவர்கள் 22 லட்சம் பேரில் 40-45 சதவீதம் அளவு 9 லட்சம் பேர்களுக்கு மேல் ஏற்கெனவே தடுப்பூசி போடப்பட்டுள்ளது. முன்களப் பணியாளர்கள் மற்றும் பிற பிரிவு துறை பணியாளர்கல் உள்பட 1 மில்லியன் மக்களுக்கு நாங்கள் ஏற்கனவே தடுப்பூசி போட்டுள்ளோம்” என்று சென்னை ஆணையாளர் பிரகாஷ் கூறினார். சென்னையில் இப்போது போதுமான அளவு தடுப்பூசிகள் உள்ளதது என்று கூறினார்.
தமிழகத்தில் பல முக்கிய நகரங்கள் தடுப்பூசி அளவில் பின்தங்கியுள்ளன. மதுரையில் 9 லட்சம் மக்கள் தொகையில் (45 வயதுக்கு மேற்பட்டவர்கள்) இதுவரை 1 லட்சம் பேருக்கு மட்டுமே தடுப்பூசி போடப்பட்டுள்ளது. 300 இடங்களில் மாவட்ட நிர்வாகம் புதன்கிழமை தடுப்பூசி போடும் பணியை தொடங்கியது. அடுத்த 15 நாட்களுக்கு தடுப்பூசிகள் இருப்பு வைத்திருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
மாநிலத்தின் இரண்டாவது பெரிய நகரமான கோவை, ஒவ்வொரு நாளும் சராசரியாக 500 புதிய கோவிட் -19 தொற்றுகளைப் பதிவு செய்து வருகிறது. கோவையில் 45 வயதுக்கு மேற்பட்ட வயதுடைய 9.85 லட்சம் பேரில் 2.79 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. தமிழகத்தில் புதன்கிழமை கொரோனா பாதிப்பால் 25 உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன.
தேர்தல் காலத்தில் பெரிய அளவில் கூட்டங்கள் கூடிய நிலையில், மாநிலத்தில் கொரோனா கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், தமிழக அரசு 2.39 லட்சம் பேர்களிடம் இருந்து 5.07 கோடி ரூபாய் அபராதம் வசூலித்துள்ளது.
இதனைத் தொடர்ந்து, இன்று செய்தியாளர்களிடம் பேசிய சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், தமிழகத்தில் கொரோனா தொற்று இரண்டாவது அலை கையை மீறி செல்லவில்லை. தமிழகத்தில் தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களில் யாரும் உயிரிழக்கவில்லை என்று தெரிவித்துள்ளர்.
இதனிடையே, தமிழக அரசு, மாநிலத்திற்கு கூடுதலாக 15 லட்சம் கோவிஷீல்டு மற்றும் 5 லட்சம் கோவெக்சின் தடுப்புசிகளை வழங்கக் கோரி மத்திய அரசு கடிதம் எழுதியுள்ளது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.