கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட மாதிரிகளை தமிழக சுகாதாரத்துறை ஆய்வுக்கு அனுப்பி உள்ளது.
கேரளா, சிங்கப்பூரில் ஒமிக்ரானின் புதிய வகை JN1 தற்போது பரவி வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட மாதிரிகளை தமிழக சுகாதாரத்துறை ஆய்வுக்கு அனுப்பி உள்ளது. இந்நிலையில் இந்த புதிய வகை ஓமிக்ரான் காரணமாக கொரோனா பரவுகிறதா ? என்பதை ஆய்வு செய்ய மாதிரிகள் அனுப்பப்பட்டுள்ளது.
இது தொடர்பாக அமைச்சர் மா. சுப்பிரமணியம் கூறுகையில் “ கேரளாவில் கோவிட் – 19 தொற்று அதிகரித்ததை முன்னிட்டு, தமிழகத்தில் காய்ச்சல் இருப்போருக்கு ஆர்.டி- பி.சி.ஆர் பரிசோதனை செய்யப்படும்.
இந்நிலையில் 264 பேருக்கு ஆர்.டி. பி.சி.ஆர் பரிசோதனை செய்யப்பட்டது. இதில் சென்னையை சேர்ந்த 2 பேர் உள்பட 8 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியாகி உள்ளது. ஆல்பா, பீட்டா, டெல்ட்டா, டெல்ட்டா பிளஸ், காமா, ஒமிக்ரான் என்று பல வேரியண்டில் கொரோனா வைரஸ் மனிதர்களை தாக்குகிறது.
இந்நிலையில் தற்போது எந்த வேரியண்ட்டால் பாதிப்பு ஏற்படுகிறது என்பதை கண்டறிய வேண்டும். இதனால் கொரோனா தொற்று உறுதியான மாதிரிகளை ஆய்வுக்கு அனுப்பி உள்ளோம். ஆய்வின் முடிவுகள் 5 நாட்களில் வந்துவிடும்.
கேரளா, சிங்கப்பூரில் ஏற்பட்டுள்ள கொரோனா தொற்று பாதிப்பு குறைவாக உள்ளது. தொண்டை வலி , இருமல், சளி தொல்லை இருப்பதாக நோயாளிகள் கூறுகிறார்கள். 3 முதல் 4 நாட்க்ளில் அவர்கள் குணமடைந்து விடுகின்றனர்” என்று அவர் தெரிவித்தார்.
மேலும் அவர் கூறுகையில் “ மக்கள் அச்சப்பட வேண்டாம். கடந்த 6 மாதங்களில் கொரோனா தொற்றால் சிலர் மட்டுமே பாதித்துள்ளனர். தமிழகத்தில் 331 ஆர்.டி- பி.சி.ஆர் பரிசோதனை மையங்கள் உள்ளது. இதில் 78 மையங்கள் தமிழக அரசின் உடையது”
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil