scorecardresearch

பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷுக்கு எச்1என்1 பாதிப்பு

அன்பில் மகேஷ் உடல்நிலை தற்போது சீராக உள்ளது. சிகிச்சை முடிந்து நாளை (வியாழக்கிழமை) வீடு திரும்புவார்

பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷுக்கு எச்1என்1 பாதிப்பு

பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷுக்கு எச்1என்1 பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக சுகாதாரத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

பள்ளிக் கல்வித் துறை அமைச்சர்  அன்பில் மகேஷிற்கு செவ்வாய்க்கிழமை திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து அவர் சென்னையில் உள்ள காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது.

இதையும் படியுங்கள்: கோவை பி.எஃப்.ஐ அலுவலகத்தில் போலீஸ் குவிப்பு

இந்த நிலையில் இன்று (செப்.28) செய்தியாளர்களை சந்தித்த சுகாதாரத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், “அமைச்சர் அன்பில் மகேஷுக்கு எச்1என்1 காய்ச்சல் உறுதி செய்யப்பட்டு உள்ளது. அவரது உடல்நிலை தற்போது சீராக உள்ளது. சிகிச்சை முடிந்து நாளை (வியாழக்கிழமை) வீடு திரும்புவார். அவருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு இல்லை” எனத் தெரிவித்தார்.

முன்னதாக நேற்று அமைச்சரின் உடல் நிலை குறித்து பேசிய மா. சுப்பிரமணியன், “அன்பில் மகேஷுக்கு மருத்துவர்கள் உரிய சிகிச்சைகள் வழங்கி வருகின்றனர். அவர் நலமுடன் இருக்கிறார் என்று தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில்,  பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் எச்1என்1 ஃப்ளூ காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதாக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Stay updated with the latest news headlines and all the latest Tamilnadu news download Indian Express Tamil App.

Web Title: Tn health minister m subramaniyan says anbil magesh affected h1n1 fever