Advertisment

கொரோனா பாதிப்பு எண்ணிக்கையை விட இறப்புகளில் கவனம் செலுத்தும் தமிழக சுகாதாரத்துறை

கொரோனா பாதிப்புகள் அதிகரித்து வரும் நிலையில், பாதிப்பு எண்ணிக்கையை விட, இறப்பு எண்ணிக்கை மற்றும் ஐசியூ சேர்க்கைகளில் அதிக கவனம் செலுத்துவதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது

author-image
WebDesk
New Update
கொரோனா பாதிப்பு எண்ணிக்கையை விட இறப்புகளில் கவனம் செலுத்தும் தமிழக சுகாதாரத்துறை

TN Health officials focus corona deaths and ICU admissions: பண்டிகை நாட்களில் மக்கள் கொரோனா பரிசோதனைக்கு முன்வராததால் குறைவான அதிகரிப்பு உள்ளதாகவும், தொற்று பாதிப்பு எண்ணிக்கையை விட ICUவில் அனுமதிப்பது, இறப்பு அதிகரிப்பில் அதிக கவனம் செலுத்துவதாகவும் என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறுகின்றனர்.

Advertisment

தமிழகத்தில் நேற்று (15.01.2022) புதிதாக 23,989 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இது அதற்கு முதல் நாளான பொங்கல் தினத்தை விட 530 அதிகம். இதில் சென்னையில் 8,978 பேருடன் பாதிப்பு எண்ணிக்கையில் முதல் இடத்தில் உள்ள நிலையில், செங்கல்பட்டு 2,854 புதிய பாதிப்புகளுடன் இரண்டாவது இடத்தில் உள்ளது. மேலும், கோயம்புத்தூர் (1,732), திருவள்ளூர் (1,478) ஆகிய மாவட்டங்களில் மட்டும் நான்கு இலக்கங்களில் பாதிப்புகள் பதிவாகியுள்ளன.

கடந்த ஒரு வாரத்தில், தமிழகத்தில் தினசரி பாதிப்பு எண்ணிக்கை 1,000 முதல் கிட்டத்தட்ட 3,000 வரை அதிகரித்துக் கொண்டே வருகிறது. இது பாதிப்பு குறைந்து வருவதாக மக்கள் புரிந்துக் கொள்ள கூடாது. பாதிப்பு எண்ணிக்கை அதிகமாக இருக்கலாம் என்று சுகாதாரத்துறைச் செயலாளர் ஜே.ராதாகிருஷ்ணன் கூறினார்.

கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட மொத்த நபர்களின் எண்ணிக்கையை விட இறந்தவர்களின் எண்ணிக்கை 1.3% ஆக உள்ளது, ஒவ்வொரு நாளும் இறப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. ஒரு வாரத்திற்கு முன்பு ஜனவரி 9 அன்று, இறப்புகளின் வாராந்திர சராசரி ஒன்பது. சனிக்கிழமை, 11 இறப்புகள் பதிவாகியபோது, ​​வாராந்திர சராசரி 18. இன்று 11 இறப்புகள் ஏற்பட்டாலும், மாநிலத்தில் வியாழன் முதல் வெள்ளி வரை 51 இறப்புகள் பதிவாகியுள்ளன. சனிக்கிழமை தாமதமாக வந்த சில அறிக்கைகள் ஞாயிற்றுக்கிழமை பட்டியலில் சேர்க்கப்படும். என்று ஒரு அதிகாரி கூறினார். சனிக்கிழமையன்று இறந்த 11 பேரில், சென்னையில் 6 பேர், திருவள்ளூரில் 2 பேர் மற்றும் கோவை, திருப்பூர் மற்றும் தூத்துக்குடியில் தலா ஒருவர்.

சிகிச்சையில் உள்ளவர்களின் எண்ணிக்கையும் ஒரு வாரத்தில் 51,335 இலிருந்து 1,31,007 ஆக அதிகரித்துள்ளது. மருத்துவமனையில் அனுமதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை 11% இலிருந்து 6% ஆகக் குறைந்திருந்தாலும், ICU-களில் படுக்கையில் இருப்பவர்களின் எண்ணிக்கை ஜனவரி 9 அன்று 4% ஆக இருந்த நிலையில், சனிக்கிழமை 7% ஆக உயர்ந்துள்ளது. ஜனவரி 9 அன்று, தீவிர சிகிச்சைப் பிரிவுகளில் 429 நோயாளிகள் இருந்தனர், அது வியாழக்கிழமை எண்ணிக்கை 696 ஆக உயர்ந்தது. சென்னையில், ஒரு வாரத்திற்கு முன்பு 9% ஆக இருந்த ICU சேர்க்கைகள் 15% ஆக உயர்ந்தன.

பரிசோதனைகளை சுயமாக பரிந்துரைக்க வேண்டாம் என்று நாங்கள் மக்களிடம் கூறுகிறோம், ஒரு நாளைக்கு மூன்று லட்சம் RTPCR சோதனைகளைச் செய்யும் திறன் எங்களிடம் உள்ளது. அரசு மருத்துவமனைகளில் பரிசோதனை இலவசம், என்று பொது சுகாதாரத்துறை இயக்குனர் டாக்டர் செல்வவிநாயகம் கூறினார்.

இதனிடையே பொது சுகாதாரத்துறை இயக்குநர் டி.எஸ்.செல்வவிநாயகம் சனிக்கிழமை அறிவித்த திருத்தப்பட்ட நெறிமுறையின்படி, அறுவைசிகிச்சை அல்லது அறுவைசிகிச்சை அல்லாத மருத்துவ நடைமுறைகளுக்கு உட்பட்ட அறிகுறி நோயாளிகள் மற்றும் பிரசவத்திற்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் கர்ப்பிணிப் பெண்களுக்கு அறிகுறிகள் உருவாகும் வரை பரிசோதனை செய்யக்கூடாது. மருத்துவமனைகளில், அறுவைசிகிச்சை மற்றும் பிரசவம் உள்ளிட்ட எந்த அவசர நடைமுறைகளும் பரிசோதனை இல்லாததால் தாமதிக்கக்கூடாது என்று உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamil Nadu Corona Virus Tamilnadu Corona Update
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment