TN HSC Plus One Result 2018: தமிழ்நாடு பிளஸ் ஒன் - 11-ம் வகுப்பு 2018 தேர்வு முடிவுகள் புதன்கிழமை காலை வெளியாகிறது. ஐஇ தமிழ் உடனடி தகவல்களை தருகிறது.
தமிழ்நாடு அரசு தேர்வுகள் இயக்குனரகம் புதன்கிழமை (மே 30) காலை 9.30 மணியளவில் தேர்வு முடிவுகளை வெளியிடுகிறது. இந்தத் தேர்வு மாநிலம் தழுவிய பொதுத் தேர்வு! இந்த தேர்வு முடிவுகளை tnresults.nic.in என்ற இணையதளத்தில் மாணவ, மாணவிகள் பார்க்கலாம்! மாணவர்கள் தங்கள் மதிப்பெண்களை பார்க்க, ஹால் டிக்கெட் தேவை!
TN HSC Plus One Result 2018: தமிழ்நாடு பிளஸ் ஒன் தேர்வு முடிவுகள் 2018 பார்ப்பது எப்படி? இதோ வழிமுறைகள்:
1. அதிகாரபூர்வ இணையதளமான tnresults.nic.in செல்லவும்.
2. அதில் TNDGE Class 11th Results 2018 அல்லது TNDGE HSC +1 Examination Results என்கிற ‘லிங்க்’கை கிளிக் செய்யவும்.
3.உங்கள் பதிவு எண்ணை அதில் பதிவு செய்யவும்.
4. உங்கள் ரிசல்டை டவுன்லோடு செய்து எதிர்கால தேவைக்கு பிரிண்ட் எடுத்துக் கொள்ளவும்.
TN HSC Plus One Result 2018 Live Updates: To read live blog Tamil story, click here
தமிழ்நாடு மேல்நிலைக் கல்வி பிளஸ் ஒன் தேர்வு கடந்த மார்ச் 1 முதல் மார்ச் 16 வரை நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.