scorecardresearch

சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் உட்பட 20 அதிகாரிகள் இடமாற்றம்! – தமிழக அரசு

20 ஐஏஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது

TN IAS officers transferred Health secretary radhakrishnan - தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் இடமாற்றம்! - தமிழக அரசு
TN IAS officers transferred Health secretary radhakrishnan – தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் இடமாற்றம்! – தமிழக அரசு

தமிழக அரசு நிர்வாக ரீதியில் சில மாற்றங்களை செய்துள்ளது. அதன்படி எட்டு ஆண்டுகளுக்கும் மேலாக தமிழக சுகாதாரத்துறை செயலாளராக பதவி வகித்து வந்த ராதாகிருஷ்ணன் போக்குவரத்துத் துறைக்கு இடமாற்றம் செய்யப்பட்டிருக்கிறார். புதிய சுகாதாரத்துறை செயலராக பீலா ராஜேஷ் நியமிக்கப்பட்டுள்ளார்.

தமிழ்நாடு குடிநீர், வடிகால் வாரிய இணை மேலாண்மை இயக்குநர் ஆனந்த், திருவாரூர் ஆட்சியராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார். சுகாதாரம், குடும்ப நலத்துறை கூடுதல் இயக்குநர் நாகராஜன், சுகாதார அமைப்பு திட்ட இயக்குநராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

சென்னை மாநகராட்சி ஆணையர் கார்த்திகேயன், நகராட்சி நிர்வாகத்திற்கு மாற்றப்பட்டுள்ளார். பதிவுத்துறை ஐ.ஜி குமரகுருபரன், வருவாய்த்துறைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

இதே போல், 20 ஐஏஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

Stay updated with the latest news headlines and all the latest Tamilnadu news download Indian Express Tamil App.

Web Title: Tn ias officers transferred health secretary radhakrishnan