ரணகளமான டி.பி.ஐ-க்கு இனி ஓய்வு: ஆசிரியர் சங்க போராட்டங்கள் மொத்தமாக வாபஸ்

கடந்த ஒரு வாரமாக போராட்டம் நடத்தி வந்த பகுதிநேர, டெட் ஆசிரியர்கள் போராட்டத்தை வாபஸ் பெற்ற நிலையில், இடைநிலை ஆசிரியர்களும் வாபஸ் பெறுவதாக அறிவித்துள்ளனர்.

கடந்த ஒரு வாரமாக போராட்டம் நடத்தி வந்த பகுதிநேர, டெட் ஆசிரியர்கள் போராட்டத்தை வாபஸ் பெற்ற நிலையில், இடைநிலை ஆசிரியர்களும் வாபஸ் பெறுவதாக அறிவித்துள்ளனர்.

author-image
WebDesk
New Update
TN Intermediate teachers call off Protest CHENNAI Tamil News

கைது செய்யப்பட்டு சமுதாய நலக்கூடங்களில் வைக்கப்பட்ட நிலையில் பகுதி நேர ஆசிரியர்கள் மட்டும் தங்களது போராட்டத்தை வாபஸ் பெறுவதாக அந்த சங்கத்தின் தலைவர் அறிவித்தார்.

Chennai | protest:சமவேலைக்கு சம ஊதியம் கோரி கடந்த 7 நாட்களாக இடைநிலை ஆசிரியர்கள் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள பேராசிரியர் அன்பழகனார் கல்வி வளாகத்தில் போராட்டம் நடத்தினர். அதேபோல், பகுதிநேர சிறப்பு ஆசிரியர்கள் தங்களுக்கு முழு நேர ஆசிரியர் பணி வழங்க வேண்டும் என்று கோரியும், டெட் தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்கள் போட்டித்தேர்வை ரத்து செய்து, வேலைவாய்ப்பு பதிவு மூப்பு அடிப்படையில் பணி நியமனம் செய்யக்கோரியும் போராட்டம் நடத்தினர்.

Advertisment

போராடி வரும் ஆசிரியர் சங்கங்களின் கோரிக்கைகள் தொடர்பாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி சென்னை தலைமை செயலகத்தில் நேற்று அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். இதில் ஆசிரியர்களின் கோரிக்கைகளை அரசுக்கு பரிந்துரைக்க 3 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும் அரசாங்கத்தின் மீது நம்பிக்கை வைத்து ஆசிரியர்கள் போராட்டத்தை முடித்துக்கொண்டு பணிக்கு திரும்ப வேண்டும் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கேட்டுக்கொண்டார்.

இதனிடையே, கடந்த ஒரு வாரமாக போராட்டம் நடத்தி வந்த ஆசிரியர்களை போலீசார் நேற்று கைது செய்தனர். ஆசிரியர்களை பேருந்தில் ஏற்றி போலீசார் அழைத்து சென்றனர். கைது செய்யப்பட்ட ஆசிரியர்கள் திருமண மண்டபம் மற்றும் சமூகநலக் கூடங்களில் தங்கவைக்கப்பட்டனர்.

பகுதி நேர ஆசிரியர்கள் போராட்டம் வாபஸ்

இந்நிலையில், பகுதி நேர ஆசிரியர்கள் போராட்டம் தற்காலிகமாக வாபஸ் பெறப்பட்டது. கைது செய்யப்பட்டு சமுதாய நலக்கூடங்களில் வைக்கப்பட்ட நிலையில் பகுதி நேர ஆசிரியர்கள் மட்டும் தங்களது போராட்டத்தை வாபஸ் பெறுவதாக அந்த சங்கத்தின் தலைவர் அறிவித்தார். 

இடைநிலை ஆசிரியர்கள் போராட்டம் வாபஸ்

Advertisment
Advertisements

இந்த நிலையில், இன்று இடைநிலை ஆசிரியர் சங்கத்தினர் நடத்தி வந்த போராட்டத்தை தற்காலிகமாக வாபஸ் பெறுவதாக தெரிவித்துள்ளனர். பள்ளிக்கல்வி செயலாளர் உடனான பேச்சுவார்த்தைக்குப் பின் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். 

தமிழ்இந்தியன்எக்ஸ்பிரஸின்அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்டெலிகிராம்ஆப்பில்பெறhttps://t.me/ietamil

Protest Chennai

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: