Katchatheevu Island | Lok Sabha Election | Tiruchirapalli | திருச்சி மக்களவை தொகுதி ம.தி.மு.க வேட்பாளர் துரை வைகோவை ஆதரித்த தமிழ்நாடு சட்டத்துறை அமைச்சர் எஸ். ரெகுபதி பரப்புரை செய்தார்.
தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவரிடம், கச்சத் தீவு விவகாரம் தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது. இதற்குப் பதிலளித்த ரெகுபதி, “வருவாய் பதிவுகளின்படி, கச்சத்தீவு முதலில் ராமநாதபுரம் இராச்சியத்தை ஆண்ட குடும்பத்திற்கு சொந்தமானது. எனவே அதனை திரும்ப பெற நெதர்லாந்தில் உள்ள சர்வதேச நீதிமன்றத்தில் வழக்கு தொடரலாம்” என்றார்.
தொடர்ந்து, “10 ஆண்டுகள் ஆட்சியில் இருந்த பிரதமர் நரேந்திர மோடி, கச்சத்தீவை இலங்கையிடம் இருந்து மீட்க முயற்சி செய்யாமல் இப்போது பேசுகிறார்.
பாஜக மாநிலத் தலைவர் கே.அண்ணாமலை தீவுப் பகுதியில் தவறான தகவல்களைப் பரப்பி வருகிறார். கருணாநிதி கச்சத்தீவை இலங்கைக்கு விட்டுக்கொடுக்க ஒருபோதும் சம்மதிக்கவில்லை. இதற்கு எந்த ஆதாரமும் இல்லை” என்றார்.
மேலும், தீவு தொடர்பான சர்ச்சையை இரண்டு ஆண்டுகளுக்கு ஒத்திவைப்பதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து மட்டுமே கருணாநிதி மத்திய அரசின் பிரதிநிதிகளிடம் கேட்டதாக அவர் கூறினார்.
தமிழ்நாட்டில் மக்களவை தேர்தலில் ஏப்.19ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இந்தத் தேர்தலில் பதிவான வாக்குகள் ஜூன்4ஆம் தேதி எண்ணப்பட்டு, அன்றைய தினமே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“