டிச.27, 30ம் தேதிகளில் இரு கட்டங்களாக உள்ளாட்சி தேர்தல்; 9 மாவட்டங்களில் தேர்தல் இல்லை - தேர்தல் ஆணையம்
இதில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளுக்கான தேர்தல் ஏற்கெனவே இல்லை என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி 9 மாவட்டங்களிலும் தேர்தல் இல்லை
தமிழகத்தில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் டிச.27, 30ம் தேதிகளில் இரு கட்டங்களாக நடத்தப்படும் என தமிழக தேர்தல் கமிஷனர் பழனிசாமி தெரிவித்துள்ளார். சுப்ரீம் கோர்ட் உத்தரவின்படி புதிதாக உருவாக்கப்பட்ட 9 மாவட்டங்கள் தவிர மற்ற 27 மாவட்டங்களில் உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Advertisment
பிரிக்கப்பட்ட மாவட்டங்களில் மறுவரையறை செய்யாமல் தேர்தல் நடத்தக்கூடாது என திமுக தொடர்ந்த வழக்கில் 9 மாவட்டங்கள் தவிர மற்ற மாவட்டங்களில் தேர்தல் நடத்தலாம் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டு புதிய அறிவிப்பாணையை வெளியிட அறிவுறுத்திய அடிப்படையில் புதிய அறிவிப்பாணையை இன்று தமிழக தேர்தல் ஆணையர் பழனிசாமி வெளியிட்டார்.
அவரது அறிவிப்பின் படி, "தேர்தல் 2 கட்டமாக நடக்கிறது. டிச. 27 மற்றும் 30 தேதிகளில் தேர்தல் நடத்தப்படும். வேட்புமனுத்தாக்கல் டிச.9, வேட்பு மனுத்தாக்கல் கடைசி நாள் டிச.16 வேட்பு மனு பரிசீலனை டிச.17 , வேட்புமனு வாபஸ்பெற இறுதிநாள் டிச.19, வாக்கு எண்ணிக்கை ஜன.2 அன்று நடைபெறும்" என்றார்.
இதில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளுக்கான தேர்தல் ஏற்கெனவே இல்லை என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி 9 மாவட்டங்களிலும் தேர்தல் இல்லை.
வேட்பு மனு தாக்கல்: 9.12.19
வேட்புமனு பரிசீலனை: 17.12.19
வேட்புமனு வாபஸ்: 19.12.19
முதற்கட்ட தேர்தல்: 27.12.19
2-ம் கட்ட தேர்தல்: 30.12.19
வாக்கு எண்ணிக்கை: 02.01.2020
மறைமுக தேர்தல்:11.01.2020
இத்தேர்தலில் 2.58 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர். 4 வண்ணங்களில் வாக்குசீட்டு வழங்கப்படும். மாவட்டத்திற்கு 1 ஐ.ஏ.எஸ் அதிகாரி பார்வையாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளனர் என்று தமிழக தேர்தல் ஆணையர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.