டிச.27, 30ம் தேதிகளில் இரு கட்டங்களாக உள்ளாட்சி தேர்தல்; 9 மாவட்டங்களில் தேர்தல் இல்லை – தேர்தல் ஆணையம்

இதில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளுக்கான தேர்தல் ஏற்கெனவே இல்லை என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி 9 மாவட்டங்களிலும் தேர்தல் இல்லை

Tamil Nadu News today Live updates
Tamil Nadu News today Live updates

தமிழகத்தில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் டிச.27, 30ம் தேதிகளில் இரு கட்டங்களாக நடத்தப்படும் என தமிழக தேர்தல் கமிஷனர் பழனிசாமி தெரிவித்துள்ளார். சுப்ரீம் கோர்ட் உத்தரவின்படி புதிதாக உருவாக்கப்பட்ட 9 மாவட்டங்கள் தவிர மற்ற 27 மாவட்டங்களில் உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


பிரிக்கப்பட்ட மாவட்டங்களில் மறுவரையறை செய்யாமல் தேர்தல் நடத்தக்கூடாது என திமுக தொடர்ந்த வழக்கில் 9 மாவட்டங்கள் தவிர மற்ற மாவட்டங்களில் தேர்தல் நடத்தலாம் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டு புதிய அறிவிப்பாணையை வெளியிட அறிவுறுத்திய அடிப்படையில் புதிய அறிவிப்பாணையை இன்று தமிழக தேர்தல் ஆணையர் பழனிசாமி வெளியிட்டார்.

அவரது அறிவிப்பின் படி, “தேர்தல் 2 கட்டமாக நடக்கிறது. டிச. 27 மற்றும் 30 தேதிகளில் தேர்தல் நடத்தப்படும். வேட்புமனுத்தாக்கல் டிச.9, வேட்பு மனுத்தாக்கல் கடைசி நாள் டிச.16 வேட்பு மனு பரிசீலனை டிச.17 , வேட்புமனு வாபஸ்பெற இறுதிநாள் டிச.19, வாக்கு எண்ணிக்கை ஜன.2 அன்று நடைபெறும்” என்றார்.

இதில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளுக்கான தேர்தல் ஏற்கெனவே இல்லை என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி 9 மாவட்டங்களிலும் தேர்தல் இல்லை.

வேட்பு மனு தாக்கல்: 9.12.19

வேட்புமனு பரிசீலனை: 17.12.19

வேட்புமனு வாபஸ்: 19.12.19

முதற்கட்ட தேர்தல்: 27.12.19

2-ம் கட்ட தேர்தல்: 30.12.19

வாக்கு எண்ணிக்கை: 02.01.2020

மறைமுக தேர்தல்:11.01.2020

இத்தேர்தலில் 2.58 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர். 4 வண்ணங்களில் வாக்குசீட்டு வழங்கப்படும். மாவட்டத்திற்கு 1 ஐ.ஏ.எஸ் அதிகாரி பார்வையாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளனர் என்று தமிழக தேர்தல் ஆணையர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

Get the latest Tamil news and Tamilnadu news here. You can also read all the Tamilnadu news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Tn local body election new date announced dec 27 30 high court order dmk case

Next Story
திருமணமாகாத ஆணும் பெண்ணும் ஒரே அறையில் தங்குவது குற்றமாகாது – ஐகோர்ட்madras high court about unmarried couple stay together lodge sealed case - திருமணமாகாத ஆணும் பெண்ணும் ஒரே அறையில் தங்குவது குற்றமாகாது - ஐகோர்ட்
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com
Best of Express

X