Coimbatore, Madurai, Trichy News Updates: மதுரை த.வெ.க மாநாடு - ஒருங்கிணைப்பு குழுக்கள் அறிவிப்பு

Coimbatore, Madurai, Trichy News Live- 15 August 2025- கோவை, மதுரை, திருச்சி உள்ளிட்ட அனைத்து மாவட்ட செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள தி இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ் இணைய பக்கத்துடன் இணைந்திருங்கள்.

Coimbatore, Madurai, Trichy News Live- 15 August 2025- கோவை, மதுரை, திருச்சி உள்ளிட்ட அனைத்து மாவட்ட செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள தி இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ் இணைய பக்கத்துடன் இணைந்திருங்கள்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
TVK Madurai Maanadu

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில மாநாடு

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் 4 நாள் மாநில மாநாடு சேலத்தில் இன்று தொடங்குகிறது. வரும் 18-ம் தேதி வரை நடைபெறவுள்ள இம்மாநாட்டில் நாளை (ஆக. 16) நடைபெறும் நிகழ்ச்சியில் முதல்வர் ஸ்டாலின் மற்றும் கூட்டணிக் கட்சித் தலைவர்கள் பங்கேற்கின்றனர். சேலம் பழைய பேருந்து நிலையம் அருகேயுள்ள நேரு கலையரங்கில் இன்று மூத்த தலைவர் இரா.நல்லகண்ணு, முன்னாள் எம்எல்ஏ பழனிசாமி ஆகியோர் மாநாட்டுக் கொடியேற்றி வைக்கின்றனர்.

  • Aug 15, 2025 18:05 IST

    மதுரை த.வெ.க மாநாடு - ஒருங்கிணைப்பு குழுக்கள் அறிவிப்பு

    மதுரை, பாரபத்தியில் வரும் 21ம் தேதி த.வெ.க மாநாடு நடைபெற உள்ள நிலையில், த.வெ.க மாநாட்டிற்கான ஒருங்கிணைப்பு குழுக்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. 5 ஒருங்கிணைப்பு குழுக்களுக்கும் நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்களை நியமனம் செய்து த.வெ.க தலைமை அறிவித்துள்ளது. 



  • Aug 15, 2025 16:29 IST

    தெருநாய்க்கடியால் பாதிக்கப்பட்டவர்கள் ஒட்டிய போஸ்டர்கள்

    தெருநாய்கள் கடியில் இருந்து குழந்தைகளை, முதியவர்களை, பொதுமக்களை காப்பாற்ற தீர்ப்பளித்த உச்சநீதிமன்றத்திற்கு நன்றி தெரிவித்து மதுரையில் தெருநாய்க்கடியால் பாதிக்கப்பட்டவர்கள் ஒட்டிய போஸ்டர்கள் கவனத்தை ஈர்த்துள்ளன. 



  • Advertisment
  • Aug 15, 2025 15:28 IST

    நெல்லையில் 6 ஆண்டுகளில் 633 வன்கொடுமை வழக்குகள் பதிவு - ஆர்.டி.ஐ தகவல்

    நெல்லை மாவட்டத்தில் கடந்த 6 ஆண்டுகளில் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் 633 வழக்குகள் பதிவாகி உள்ளதாக தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் தகவல் வெளியாகி உள்ளது. உண்மைக்கு புறம்பானது என 45 வன்கொடுமை தடுப்பு வழக்குகள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிய வந்துள்ளது.



  • Aug 15, 2025 14:44 IST

    குற்றால அருவிகளில் மீண்டும் திடீர் வெள்ளப்பெருக்கு

    குற்றால அருவிகளில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் சுற்றுலா பயணிகளின் நலன் கருதி அருவிகளில் குளிக்க தற்காலிக தடை விதித்த காவல்துறை உத்தரவிட்டுள்ளது.



  • Advertisment
    Advertisements
  • Aug 15, 2025 14:38 IST

    விராலிமலை முருகன் கோயில் கோபுரத்தில் ஏறி போராட்டம் நடத்திய சமூக ஆர்வலர் உயிரிழப்பு

    புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை முருகன் கோயில் கோபுரத்தில் ஏறி போராட்டம் நடத்திய ஆறுமுகம் என்பவர் உயிரிழந்தார். சமூக ஆர்வலரான ஆறுமுகம் கோயிலை சுற்றியுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்ற் வலியுறுத்தி, கோயில் கோபுரத்தில் உள்ள சிற்பங்களைப் பிடித்துக்கொண்டு கீழே இறங்க முயற்சி செய்தபோது வழுக்கி விழுந்து உயிரிழந்தார்.



  • Aug 15, 2025 12:26 IST

    தருமபுரி மாவட்ட சுதந்திர தின விழாவில், வணக்கம் சொல்லி வரவேற்ற குட்டி ரோபோ

    தருமபுரி மாவட்ட விளையாட்டு மைதானத்தில் நடந்த 79வது சுதந்திர தின விழாவில், சிறப்பு விருந்தினர்களை குட்டி ரோபோ வணக்கம் சொல்லி வரவேற்று உற்சாகப்படுத்தியது.



  • Aug 15, 2025 11:13 IST

    குற்றாலம் மெயின் அருவியில் குளிக்கத் தடை!

    மேற்கு தொடர்ச்சி மலையில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் குற்றால அருவிகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனையடுத்து குற்றாலம் மெயின் அருவியில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது



  • Aug 15, 2025 09:15 IST

    தமிழகத்தில் 20-ம் தேதி வரை மழை பெய்ய வாய்ப்பு

    தென்னிந்தியப் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக இன்று (ஆக .15) தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஓரிரு இடங்களில் மணிக்கு 40 முதல் 50 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும். வரும் 16 முதல் 20-ம் தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. 

    சென்னை வானிலை ஆய்வு மையம் 



Tamil Nadu

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: