தமிழ்நாட்டில் 39 மக்களவைத் தொகுதிகளுக்கான தேர்தல் ஏப்ரல் 19-ம் தேதி நடைபெறுகிறது. அதே போல் புதுச்சேரி மக்களவைத் தொகுதிக்கும் அன்றைய தினம் தேர்தல் நடைபெறுகிறது. இந்தியாவில் ஏப்ரல் 19-ம் தேதி தொடங்கி ஜுன் 1 வரை 7 கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. ஜுன் 4-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. இந்நிலையில் தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்புமனுத் தாக்கல் மார்ச் 20-ம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வரும் நிலையில் இன்றுடன் (மார்ச் 27) வேட்புமனுத் தாக்கல் நிறைவடைகிறது. தமிழ்நாடு, புதுச்சேரியில் மக்களவைத் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் இன்றுடன் நிறைவடைகிறது.
தி.மு.க மற்றும் கூட்டணி கட்சிகள், அ.தி.மு.க மற்றும் கூட்டணி கட்சிகள், பா.ஜ.க, அதன் கூட்டணி கட்சிகள், நாம் தமிழர் மற்றும் சுயேட்சை வேட்பாளர்கள் எனப் பலர் வேட்பு மனுத் தாக்கல் செய்துள்ளனர். குறிப்பாக நேற்று பல்வேறு கட்சிகள் வேட்பு மனுத் தாக்கல் செய்தனர். தமிழகத்தில் இதுவரை 100 பெண்கள் உள்பட 700க்கும் மேற்பட்டவர்கள் வேட்புமனுத் தாக்கல் செய்துள்ளனர்.
இன்றுடன் வேட்புமனுத் தாக்கல் நிறைவடையும் நிலையில், நாளை (மார்ச் 28) வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை நடைபெறும். மார்ச் 30-ம் தேதி இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“