Advertisment

தமிழக மருத்துவ மாணவர் ஜார்கண்டில் உயிரிழப்பு; உடல் எரிந்த நிலையில் மீட்பு; போலீஸ் விசாரணை

ஜார்க்கண்ட் தலைநகர் ராஞ்சியில் உள்ள மருத்துவ கல்லூரியில் படித்துவந்த தமிழக மாணவர் மதன்குமார் உடல் பாதி எரிந்த நிலையில் உயிரிழந்து கிடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

author-image
WebDesk
Nov 02, 2023 16:02 IST
New Update
medical student dies in jarkant II

தமிழக மருத்துவ மாணவர் ஜார்கண்டில் உயிரிழப்பு; உடல் எரிந்த நிலையில் மீட்பு; போலீஸ் விசாரணை

ஜார்கண்ட் தலைநகர் ராஞ்சியிலுள்ள மருத்துவக் கல்லூரியில் தமிழகத்தைச் சேர்ந்த மருத்துவ மாணவர் மதன்குமார் உயிரிழந்த உடல் பாதி எரிந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. தமிழக மருத்துவ மாணவரின் மரணம் குறித்து ராஞ்சி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisment

தமிழ்நாட்டை சேர்ந்த மதன்குமார் என்ற மாணவர் ஜார்க்கண்ட் தலைநகர் ராஞ்சியில் உள்ள மருத்துவ கல்லூரியில் 2-ம் ஆண்டு தடயவியல் மருத்துவம் படித்துக் கொண்டிருந்த நிலையில், அவர் திடீரென காணாமல் போனதாக கூறப்பட்டது. இதையடுத்து, ஜார்கண்டில் உள்ள ஆர்.ஐ.எம்.எஸ் என்ற மருத்துவமனை மருத்துவ கல்லூரி வளாகத்திலேயே தமிழக மாணவர் மதன்குமாரின் உடல் பாதி எரிந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

தமிழக மருத்துவ மாணவர் மதன்குமார் உடல் அவர் படித்து வந்த மருத்துவ கல்லூரி அருகிலேயே கண்டெடுக்கப்பட்டு உடல் பாதி எரிந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டிருக்கிறது. மாணவரின் மரணம் குறித்து ராஞ்சி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மாணவர் மதன்குமாரை யாரேனும் கொலை செய்து எரித்து விட்டனரா? என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

ஜார்க்கண்ட் தலைநகர் ராஞ்சியில் உள்ள மருத்துவ கல்லூரியில் படித்துவந்த தமிழக மாணவர் மதன்குமார் உடல் பாதி எரிந்த நிலையில் உயிரிழந்து கிடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

#Tamil Nadu
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment