கிராமப்புற மக்களின் முக்கிய வாழ்வாதாரமான 100 நாள் வேலை திட்டத்தை முடக்கும் வகையில் மத்திய பா.ஜ.க அரசு தமிழக அரசுக்கு செலுத்த வேண்டிய நிதியை நிறுத்தி உள்ளதை கண்டித்து தமிழக முழுவதும் தி.மு.க சார்பில் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்று வருகிறது. அதன் தொடர்ச்சியாக, திருச்சி தெற்கு மாவட்டம் திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட திருவெறும்பூர் வடக்கு ஒன்றியம் நடராஜபுரம் ஊராட்சியில் ஒன்றிய கழகச் செயலாளர் கே.எஸ்.எம்.கருணாநிதி தலைமையில், அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி கலந்து கொண்டு மத்திய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் முழக்கமிட்டார்.
/indian-express-tamil/media/post_attachments/dcc21945-40f.jpg)
இந்த ஆர்ப்பாட்டத்தின் போது தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி பேசுகையில், "நூறு நாள் வேலையில் வேலை செய்த உங்களுக்கு, ஒன்றிய அரசு வேலை செய்ததற்கான ஊதியத்தை சுமார் 4 முதல் 5 மாதம் வழங்காமல் இழுத்தடித்து வருகின்றது. இதற்கான நிலுவைத் தொகை ரூ. 4034 கோடியாகும். இந்த தொகையை வழங்காமல் ஒன்றிய அரசு இழுத்து அடித்து வருகிறது.
இந்த நிலையில் தமிழகம் முதல்வரும் துணை முதல்வரும் மகளிருக்கு மாதம் ஆயிரம் தொகையை வழங்கி வருகின்றனர். ரூபாய் 1000 கிடைக்காமல் விண்ணப் உள்ள அனைவருக்கும் விரைவில் வழங்கப்படும் என கூறியுள்ளனர். இந்த 100 நாள் வேலை திட்டத்தில் 76 லட்சம் குடும்பத்தில் பயன்பெற்று வருகின்றனர். இதில் 91 லட்சம் பேர் வேலை பார்த்து வருகின்றனர். இவர்களில் 86 சதவீதத்தினர் பெண்கள், இவர்களில் 21 சதவிதத்தினர் தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினராக இருக்கும் நிலையில் 100-நாள் வேலைத்திட்டத்தில் வேலை செய்த அவர்களுக்கு வழங்க வேண்டிய நிலுவைத் தொகையை உடனடியாக ஒன்றிய அரசு வழங்க வேண்டும்.
/indian-express-tamil/media/post_attachments/d3c969d0-e2d.jpg)
தமிழகத்தின் உரிமையை எதற்காகவும், யாருக்காகவும் விட்டுக் கொடுக்க மாட்டோம், தமிழகத்தின் உரிமையை பாதுகாக்க ஒன்று பட்டு போராடுவோம், தமிழ்நாடு போராடும், தமிழ்நாடு வெல்லும்" என்று அவர் தெரிவித்தார். மேலும், பொதுமக்களுடன் கீழ்க்கண்டவாறு உறுதிமொழியினையும் எடுத்துக் கொண்டார் அமைச்சர் அன்பில் மகேஷ்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் தலைமை செயற்குழு உறுப்பினர் கே.என்.சேகரன், மாநில அணி நிர்வாகி கவிஞர் சல்மா மற்றும் திமுக நிர்வாகிகள் மற்றும் நூற்றுக்கணக்கான பெண்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் கலந்துக்கொண்டு, மத்திய அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர்.
செய்தி: க.சண்முகவடிவேல்.