நெடுஞ்சாலைகளில் டோல்கேட் அமைக்கக் கூடாது என பலமுறை தாம் கடிதம் எழுதியுள்ளதாக சட்டப்பேரவையில் அமைச்சர் எ.வ. வேலு கூறினார்.
தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் 3வது நாளாக இன்று நடந்தது. அப்போது புதுக்கோட்டை திமுக உறுப்பினர் முத்துராஜா, “புதுக்கோட்டை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இருந்து பிருந்தாவனம், அண்ணாசாலை, டி.வி.எஸ் கார்னர் வழியாக செல்லும் சாலையை 4வழி சாலையாக தரம் உயர்த்தி தர வேண்டும்” எனக் கோரிக்கை விடுத்தார்.
இதற்கு நெடுஞ்சாலை மற்றும் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ. வேலு பதிலளித்தார். அப்போது அவர், “தேசிய நெடுஞ்சாலைகளில் டோல்கேட் அமைக்கக் கூடாது என்று தொடர்ந்து கடிதம் எழுதிவருகிறோம்.
தமிழ்நாட்டில் நான்கு வழி சாலைகளாக மாற்ற முதலமைச்சர் சாலை திட்டம் அமலில் உள்ளது. இந்தச் சாலைகளில் டோல்கேட் அமைப்பதில்லை.
சட்டமன்ற உறுப்பினர் சொல்கின்ற சாலை ஆய்வு செய்யப்பட்டு, அதை நான்கு வழி சாலையாக மாற்றுவது குறித்து பணிகள் மேற்கொள்ளப்படும்” என்றார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“