Thirunelveli | k-n-nehru | dmk: தி.மு.க இளைஞரணி 2வது மாநில மாநாடு சேலம் மாவட்டம் ஆத்தூர் அடுத்த பெத்தநாயக்கன்பாளையத்தில் வருகிற 24ம் தேதி நடைபெற உள்ளது. இந்த மாநாட்டு பணிகளை மேற்பார்வையிட அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் தி.மு.க-வின் நிர்வாகிகள் என பலரும் வந்து செல்கின்றனர்.
இந்நிலையில், மாநாட்டு பணிகளை தமிழக நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் கே.என் நேரு ஆய்வு செய்தார். இதனிடையே, மாநாட்டு பந்தலை பார்வையிட நெல்லை மேயர் சரவணன் வந்தார். அப்போது அமைச்சர் கே.என் நேருவை தி.மு.க நிர்வாகிகள் சந்தித்து பேசிக்கொண்டிருந்தனர். அப்போது நெல்லை மேயர் சரவணன் அமைச்சர் கே.என் நேருவை சந்தித்தார்.
இந்த சந்திப்பின் போது அமைச்சர் கே.என் நேரு நெல்லை மேயர் சரவணனைப் பார்த்து, திருநெல்வேலியில் அதிக அளவில் மழை பெய்து வருவதால், உடனே அங்கு சென்று ஆயத்தப் பணிகளை மேற்கொள்ள நெல்லை மேயருக்கு அமைச்சர் நேரு உத்தரவிட்டார். "நீ போயா, திருநெல்வேலியில சரியான மழையாம். நீ உடனே கிளப்பு, எல்லா ஆபீசரும் அங்க போயிட்டாங்க. உடனே கிளம்பு." என்று கூறினார். இதனையடுத்து, மேயர் சரவணனும் அவரது ஆதரவாளர்களும் நெல்லைக்கு புறப்பட்டனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“