ஊடக விளம்பரத்திற்கு தி.மு.க-வை குறை கூறிகிறார் விஜய்: அமைச்சர் கே.என். நேரு பதிலடி

'ஊடக விளம்பரத்திற்காகவே தி.மு.க-வை விஜய் குறை கூறி வருகிறார். தமிழ்நாட்டில் நடப்பது பெண்களுக்கான ஆட்சி மற்றும் பெண்களை பாதுகாப்பதற்கான ஆட்சி" எனக் கூறி விஜய்யின் பேச்சுக்கு அமைச்சர் கே.என்.நேரு பதிலடி கொடுத்துள்ளார்.

author-image
WebDesk
New Update
TN Minister KN Nehru responds to Vijay TVK comments over DMK Tamil News

விஜய்யின் பேச்சுக்கு அமைச்சர் கே.என்.நேரு பதிலடி கொடுத்துள்ளார்.

நாடு முழுவதும் இன்றும் மகளிர் தின விழா கொண்டாடப்பட்டு வருகிறது. பல்வேறு அரசியல் கட்சியினரும் பிரபலங்களும் மகளிர் தின வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.இந்த நிலையில், மகளிர் தினத்தை ஒட்டி தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் இன்று வீடியோ ஒன்றை வெளியிட்டார். அதில், 'பாதுகாப்பாக இருந்தால் தானே சந்தோஷத்தை உணர முடியும் என்று நீங்கள் நினைப்பது எனக்கு புரிகிறது' என்று குறிப்பிட்ட அவர்  தி.மு.க அரசு நம்மை ஏமாற்றி விட்டதாக வெளிப்படையாகவே பேசினார். 

Advertisment

மேலும், 'தி.மு.க-வை அகற்றுவோம், 2026 இல் மாற்றத்தை ஏற்படுத்தி மகளிருக்கான பாதுகாப்பை உறுதி செய்வோம்' என்றும் குறிப்பிட்டு,  பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்ற கருத்தை ஆணித்தரமாக தனது வீடியோவில் கூறியிருந்தார் விஜய். 

இந்த நிலையில், விஜய்யின் பேச்சுக்கு அமைச்சர் கே.என்.நேரு பதிலடி கொடுத்துள்ளார். திருச்சியில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், 'ஊடக விளம்பரத்திற்காகவே தி.மு.க-வை விஜய் குறை கூறி வருகிறார். தமிழ்நாட்டில் நடப்பது பெண்களுக்கான ஆட்சி மற்றும் பெண்களை பாதுகாப்பதற்கான ஆட்சி" என்று தெரிவித்தார்.   

செய்தி: க.சண்முகவடிவேல். 

Dmk Vijay K N Nehru Tamilaga Vettri Kazhagam

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: