Advertisment

'புற்றுநோயை துல்லியமாக கண்டறிய 5 மாவட்டங்களில் பெட் சி.டி ஸ்கேன்': அமைச்சர் மா.சு தகவல்

அனைத்து மாவட்டங்களிலும் உள்ள அரசு மருத்துவமனைகளில் கட்டண படுக்கையறைகள் படிப்படியாக துவங்கப்பட உள்ளது என மருத்துவ மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுபிரமணியன் கூறினார்.

author-image
WebDesk
New Update
TN minister Ma Subramanian cancer ct scan Coimbatore govt hospital press meet Tamil News

கோவை அரசு மருத்துவமனை வளாகத்தில் நடைபெற்ற நிகழ்வில் மருத்துவ மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுபிரமணியன் கலந்துகொண்டு புதிய கட்டிடங்களை பார்வையிட்டார்.

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

Ma Subramanian | Coimbatore: கோவை மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் 163.3 கோடி மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்ட புதிய உயர் சிறப்பு மருத்துவ கட்டிடம் மற்றும் 2.45 கோடி மதிப்பீட்டில் நீராவி சலவை வசதி கட்டிடம் கட்டுவதற்கு  தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் பொள்ளாச்சியில் இருந்து காணொளி காட்சி வாயிலாக அடிக்கல் நாட்டியும், திறந்தும் வைத்தார்.

Advertisment

கோவை அரசு மருத்துவமனை வளாகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வில் மருத்துவ மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுபிரமணியன் கலந்துகொண்டு புதிய கட்டிடங்களை பார்வையிட்டார்.

இதனைத் தொடர்ந்து அமைச்சர் மா. சுபிரமணியன் செய்தியாளரிடம் பேசுகையில், "தமிழகத்தில் புற்றுநோயை துல்லியமாக கண்டறிவதற்கு இரண்டு இடங்களில் மட்டுமே பெட் சி.டி ஸ்கேன் இருந்தது. தற்போது கோவை, சேலம், திருநெல்வேலி, தஞ்சாவூர், காஞ்சிபுரம் போன்ற 5 மாவட்டங்களில் கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனைகளிலும் இந்த பெட் சி.டி ஸ்கேன்கள் அமைக்கப்பட்டு பயன்பாட்டில் இருந்து வருகிறது.

இன்று கோவை அரசு மருத்துவமனையில் 26 கட்டண படுக்கையறைகள், 100 தீவிர சிகிச்சைக்கான படுக்கைகள், 300 படுக்கை வசதிகள், 10 அறுவை சிகிச்சை அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்பத்துடன் கூடிய கருவிகள் இந்த மருத்துவமனைக்கு அர்ப்பணிக்கப்பட்டிருக்கிறது.

வால்பாறை, உடுமலைப்பேட்டை, வீரபாண்டி ஈரோடு,சத்தியமங்கலம் உள்ளிட்ட இடங்களில் புதிய கட்டடங்களை முதலமைச்சர் திறந்து வைத்துள்ளார். அதே போல கோவை, ஈரோடு, திருப்பூர், நீலகிரி ஆகிய நான்கு மாவட்டங்களில் மருத்துவத் துறைக்கு என 397.71 லட்சம் ரூபாய் மதிப்புள்ளான பணிகள் துவங்கி வைக்கப்பட்டுள்ளது.

கோவை அரசு மருத்துவமனையில் மழை நீர் தேக்கத்தை போக்கும் விதமாக 10 கோடி ரூபாய் செலவில் மழை நீர் வடிகால் அமைக்கப்பட உள்ளது. மேற்கு மண்டலமான 4 மாவட்டங்களுக்கும் மக்கள் மகிழ்ச்சி அடையும் வகையிலான மருத்துவத்துறை அறிவிப்புகள் பெரிய அளவில் அறிவிக்கப்பட்டிருக்கிறது. அனைத்து மாவட்டங்களிலும் உள்ள அரசு மருத்துவமனைகளில் கட்டண படுக்கையறைகள் படிப்படியாக துவங்கப்படள்ளது. இந்தியாவில் முதன்முறையாக புதிய தேர்வாளர்களுக்கு கவுன்சிலிங் வைத்து காலி பணியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளது. ஊட்டியில் மட்டும் 70-க்கும் மேற்பட்ட காலிப் பணியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளது" என்று அவர் தெரிவித்தார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

Coimbatore Ma Subramanian
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment