scorecardresearch

மெரினா சாலையில் விபத்தில் சிக்கிய இளைஞர்கள்.. துரிதமாக செயல்பட்ட மா.சுப்பிரமணியன்

சாலை விபத்தில் சிக்கிய கூடைப்பந்து வீரரான சூர்யா, ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

மெரினா சாலையில் விபத்தில் சிக்கிய இளைஞர்கள்.. துரிதமாக செயல்பட்ட மா.சுப்பிரமணியன்

சென்னை மெரினா கடற்கரை சாலையில் நான்கு இளைஞர்கள் விபத்தில் சிக்கினர். அவர்களை மீட்டு அமைச்சர் மா.சுப்பிரமணியன் மருத்துவமனையில் அனுமதித்தார்.

சாலை விபத்தில் சிக்கிய கூடைப்பந்து வீரரான சூர்யா, ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

எம்.ஜி.ஆர்‌ நூற்றாண்டு வளைவு அருகே ராயபுரத்தைச் சேர்ந்த சூர்யா,ஸ்ரீபாலாஜி ஆகிய இருவரும் ஒரு இருசக்கர வாகனத்திலும், மற்றொரு வாகனத்தில் கெளதம், முகமது தமீம் ஆகியோர் என பயணித்துக் கொண்டிருந்தனர்.

அப்போது, எதிர்பாராத விதமாக இவர்கள் சென்ற வாகனங்கள் விபத்திற்குள்ளானது. அப்போது, அவ்வழியாக சென்று கொண்டிருந்த, அமைச்சர் மா.சுப்பிரமணியன் விபத்துக்குள்ளான நான்கு இளைஞர்களை உடனடியாக மீட்டு முற்பட்டார்.

அவர்களை அவ்விடத்தில் இருந்து மீட்டு, தனது காரில் அழைத்து சென்று, ராஜிவ்காந்தி அரசு பொது மருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதித்தார்.

இதில் 3 பேர் வீடு திரும்பிய நிலையில், கூடைப்பந்து வீரரான சூர்யாவிற்கு விபத்தில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டதால், உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது அவரது குடும்பத்தாரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது

Stay updated with the latest news headlines and all the latest Tamilnadu news download Indian Express Tamil App.

Web Title: Tn minister ma subramanian rescued four members from road accident

Best of Express