Advertisment

ஒரு போதும் டங்ஸ்டன் சுரங்கத் திட்டம் வராது; மக்கள் மீதான வழக்கு ரத்து: அமைச்சர் மூர்த்தி உறுதி

தி.மு.க ஆட்சியில் ஒரு போதும் டங்ஸ்டன் திட்டம் வராது என்றும், மக்கள் மீது பதியப்பட்ட வழக்கை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மதுரை மாவட்டம் அரிட்டாப்பட்டியில் அமைச்சர் மூர்த்தி உறுதியளித்துள்ளார்.

author-image
WebDesk
New Update
TN Minister Moorthy speech at madurai Arittapatti Tamil News

ஜனநாயக நாட்டில் போராடுவதற்கு யாருக்கும் உரிமை உண்டு என்றும், உரிமையின் அடிப்படையில் மக்கள் பேரணியில் ஈடுபட்டுள்ளனர் என்றும் மதுரை மாவட்டம் அரிட்டாப்பட்டியில் அமைச்சர் மூர்த்தி கூறினார்.

மதுரை மாவட்டம், மேலூர் அருகேயுள்ள அரிட்டாபட்டியில் டங்ஸ்டன் சுரங்கத் திட்டத்தை எதிர்த்து பொதுமக்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில், மேலூர் பகுதியில் ஒரு போதும் டங்ஸ்டன் சுரங்கத் திட்டம் வராது என அமைச்சர் மூர்த்தி அரிட்டபட்டியில் மக்கள் முன்பு உறுதியாக தெரிவித்தார்.

Advertisment

மதுரை மாவட்டம் மேலூர் வட்டத்திற்கு உட்பட்ட அரிட்டாபட்டி, நாயக்கர்பட்டி, வல்லாளபட்டி, தெற்குத்தெரு, நரசிங்கம்பட்டி, கிடாரிப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 5 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் டங்ஸ்டன் சுரங்கம் அமைப்பதற்கான ஏல அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்டதைத் தொடர்ந்து இந்த பகுதி மக்கள் தொடர்ந்து பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், கடந்த ஜனவரி 7-ஆம் தேதி காவல்துறையின் தடையை மீறி நரசிங்கம்பட்டி பெருமாள்மலையிலிருந்து மதுரை வரை சுமார் 16 கி.மீ. தூரம் பேரணியாகச் சென்று மதுரை தல்லாகுளம் பகுதியில் அமைந்துள்ள தலைமை அஞ்சல் அலுவலகம் முன்பாக அடையாளப் போராட்டம் ஒன்றை பல்லாயிரக்கணக்கான மக்கள் திரண்டு நடத்தினர். ஜல்லிக்கட்டுக்காக நடந்த போராட்டத்தை அடுத்து நடைபெற்ற மாபெரும் மக்கள் திரள் போராட்டமாக இது அமைந்தது.

அந்த போராட்டத்தின் முடிவில், மத்திய அரசு டங்ஸ்டன் சுரங்கத் திட்டத்தை முழுமையாக கைவிட வேண்டும் எனவும், தமிழக அரசு நடப்பு சட்டப்பேரவைத் கூட்டத்தொடரில் மதுரையை தமிழ்ப்பண்பாட்டு மண்டலமாகவும், பெரியாறு பாசனப் பகுதி முழுவதையும் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்து சட்டமியற்றி அரசிதழில் வெளியிட வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்திருந்தனர்.

Advertisment
Advertisement

இந்த நிலையில், வணிக வரித்துறை அமைச்சர் மூர்த்தி, 'அரிட்டாபட்டி, நாயக்கர்பட்டி, வல்லாளபட்டி உள்ளிட்ட கிராமங்களில் மக்களை சந்தித்துப் பேசினார். அப்போது, 'தமிழக அரசு டங்ஸ்டன் வருவதை ஒருபோதும் ஏற்கவில்லை. மேலூர் பகுதியில் ஒரு போதும் டங்ஸ்டன் சுரங்கத் திட்டம் வராது, வரக்கூடாது என சட்டப்பேரவையில் அனைத்துக் கட்சி ஆதரவோடு தீர்மானம் இயற்றி மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. ஆகையால் மக்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை' என உறுதியாக தெரிவித்தார்.

Madurai
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment