மதுரையைச் சேர்ந்த பத்திரப்பதிவு மற்றும் வணிவரித்துறை அமைச்சர் பி.மூர்த்தியின் மகன் தியானேஷுக்கும், திருச்சியைச் சேர்ந்த ஸ்மிர்தவர்ஷினிக்கும் செப்டம்பர் 9ஆம் தேதியன்று காலை திருமணம் நடந்தது.
இந்தத் திருமணத்தை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நடத்திவைத்தார். இந்தத் திருமண ஏற்பாடுகள் பாண்டிகோயில் அருகில் உள்ள மண்டபத்தில் இரண்டு மாதங்களாக நடந்தன.
இந்தத் திருமணத்தில் மொய் கவுன்ட்டர்கள் மட்டும் கிட்டத்தட்ட 50 வைக்கப்பட்டிருந்தன. இந்தப் பணி தனியாரிடம் ஒப்படைக்கப்பட்டத. திருமண இரவு விருந்தில் மட்டும் கிட்டதட்ட 50 ஆயிரத்தக்கும் மேற்பட்டவர்கள் கலந்துகொண்டனர்.
இந்தத் திருமணத்தில் கலந்துகொண்ட மு.க. ஸ்டாலின் அமைச்சர் மூர்த்தியை வெகுவாக பாராட்டினார்.
இதற்கு மத்தியில் அமைச்சர் மூர்த்தியின் வீடு திருமணம் குறித்து பல்வேறு சலசலப்புகள் ஏற்பட்டன. இந்தத் திருமணம் ஜெயலலிதாவின் வளர்ப்பு மகன் சுதாகரன் திருமணத்தோடு ஒப்பிட்டு பேசப்பட்டது.
மூர்த்தி வீட்டு திருமணத்தில் சுமார் 5 ஆயிரம் ஆடுகள்,2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கோழிகள் வெட்டப்பட்ட என்றும் திருமணத்துக்கு கிட்டத்தட்ட ரூ.50 கோடி முதல் ரூ.100 கோடி வரை செலவு செய்து இருக்கலாம் என அந்தத் தகவல்கள் நீண்டன.
இந்த நிலையில் இதுதொடர்பாக பேசிய அமைச்சர் மூர்த்தி, “தனது மகன் திருமணத்துக்கு ரூ.3 கோடி செலவிட்டேன் என்றும் அதில் ரூ.1.50 கோடியில் அனைவரையும் சமமாக அமர வைத்து விருந்து வைத்தேன் எனவும் கூறியுள்ளார்.
அமைச்சர் மூர்த்தி வீட்டு திருமண விழாவில் அவரின் தொகுதி மக்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது. வழிநெடுகிலும் கரும்பு மற்றும் வாழை குலைகள் கட்டப்பட்டிருந்தன. அதை திருமணத்துக்கு வந்திருந்த மக்கள் எடுத்துச் சென்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil