Advertisment

துணை முதல்வர் பதவி: பிரேமலதாவுக்கு பதிலடி கொடுத்த அமைச்சர் முத்துசாமி

தி.மு.க-வில் மூத்த அமைச்சருக்கு துணை முதல்வர் பொறுப்பு வழங்க வேண்டும் என பிரேமலதா கூறிய நிலையில், அந்த பொறுப்பை யாருக்கு வழங்க வேண்டும் என்பதை தாங்கள் தான் முடிவு செய்வோம் என்று அமைச்சர் முத்துசாமி கூறினார்.

author-image
WebDesk
New Update
 TN Minister Muthusamy response to premalatha deputy cm post and speaks about jailed Senthil Balaji Tamil News

கோவை ஆட்சியர் அலுவலகத்தில் மகளிர் சுய உதவி குழு சார்பில் அமைக்கப்பட்டுள்ள சிறுதானிய உணவகத்தை தமிழக வீட்டுவசதித் துறை அமைச்சர் முத்துசாமி திறந்து வைத்தார்.

பி.ரஹ்மான் - கோவை மாவட்டம்.

Advertisment

கோவை ஆட்சியர் அலுவலகத்தில் மகளிர் சுய உதவி குழு சார்பில் அமைக்கப்பட்டுள்ள சிறுதானிய உணவகத்தை தமிழக வீட்டுவசதித் துறை அமைச்சர் முத்துசாமி திறந்து வைத்தார். இதன்பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது:- 

எளிய மக்கள் காலதாமதமாகல் வீடு கட்டுவதற்க்காக உடனடி அனுமதி கிடைப்பதற்காக திட்டத்தை முதல்வர் துவக்கியுள்ளார். இதில் சதுர அடிக்கு இரு மடங்கு கூடுதல்  கட்டணம் வசூலிப்பதாக அ.தி.மு.க-வினர் கூறுவது தவறு. முன்பு போல அனுமதி வாங்கும் நடைமுறை இருந்தால் மக்களுக்கு  எவ்வளவு அலைச்சல், எவ்வளவு செலவு ஆகியிருக்கும் என்பதை சிந்தித்து பார்க்க வேண்டும். அதிக கட்டணம் இருந்தால் முதல்வர் ஆய்வு செய்வார். ஆனால் அப்படி எதுமில்லை. 

வருகின்ற தேர்தலில் செந்தில் பாலாஜி இருந்தால் பலமாக தான் இருக்கும். அவர் இப்போது சிறையில் இருப்பது எங்களுக்கு மட்டுமல்ல எல்லோருக்கும் வருத்தம் தான்.

தி.மு.க-வில் மூத்த அமைச்சருக்கு துணை முதல்வர் பொறுப்பு வழங்க வேண்டும் என்ற தே.மு.தி.க பொதுச் செயலாளர் பிரேமலதா கருத்து கூறியுள்ளார். எங்கள் கட்சியில் யாருக்கு துணை முதல்வர் பொறுப்பு வழங்க வேண்டும் என்பதை நாங்கள் தான் முடிவு செய்வோம்,”

இவ்வாறு அமைச்சர் முத்துசாமி கூறினார். 

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

 

Coimbatore
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment