Advertisment

'களத்திற்கே வராத தற்குறி': விஜய் மீது அமைச்சர் சேகர்பாபு பாய்ச்சல்

200 தொகுதிகளை அல்ல, 234 தொகுதிகளையும் தி.மு.க. கைப்பற்றும் என்று கூறி த.வெ.க தலைவர் விஜய்-யின் கருத்துக்கு அமைச்சர் சேகர் பாபு பதிலடி கொடுத்துள்ளார்.

author-image
WebDesk
New Update
 TN Minister PK Sekar Babu DMK responds to TVK Vijay Speech Tamil News

200 தொகுதிகளை அல்ல, 234 தொகுதிகளையும் தி.மு.க. கைப்பற்றும் என்று கூறி த.வெ.க தலைவர் விஜய்-யின் கருத்துக்கு அமைச்சர் சேகர் பாபு பதிலடி கொடுத்துள்ளார்.

சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள அரங்கில் 'எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர்' என்ற புத்தக வெளியீட்டு விழா நேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்த புத்தக வெளியீட்டு விழாவில் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் பங்கேற்றார். முன்னாள் நீதியரசர் சந்துரு, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணைப்பொதுச்செயலாளர் ஆதவன் உள்பட பலரும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர். 

Advertisment

இந்நிகழ்வில் பேசிய  விஜய், " விடுதலை சிறுத்தைகள் தலைவர் தொல். திருமாவளவனால் இன்று நிகழ்ச்சிக்கு  வர முடியாமல்  போனது. அம்பேத்கரின் புத்தக வெளியீட்டு விழாவிற்கு கூட அவரால் கலந்து கொள்ள முடியாத அளவிற்கு, கூட்டணி கட்சிகள் சார்ந்து எவ்வளவு அழுத்தம்  இருக்கும் என்று என்னால் யூகிக்க முடிகிறது. ஆனாலும், அவரது மனசு முழுக்க  முழுக்க இன்று நம்முடன் தான் இருக்கிறது.

மக்கள் உணர்வுகளை மதிக்கத் தெரியாத, அடிப்படை சமூக நீதியான பாதுகாப்பைக் கூட உறுதி செய்ய இயலாத கூட்டணி கணக்குகளை மட்டுமே நம்பி இருமாப்புடன் இருநூறு வெல்வோம் என எகத்தாளம் முழக்கமிடும் மக்கள் விரோத ஆட்சியாளர்களுக்கு என் மக்களோடு இணைந்து நான் விடும் எச்சரிக்கை, நீங்கள் உங்கள் சுயநலனுக்காகப் பல வழிகளில் பாதுகாத்துவரும் கூட்டணிக் கணக்குகள் அனைத்தும் 2026 தேர்தலில், மக்களே மைனசாக்கி விடுவார்கள்" என்று அவர் கூறியிருந்தார்.

இந்நிலையில், 200 தொகுதிகளை அல்ல, 234 தொகுதிகளையும் தி.மு.க. கைப்பற்றும் என்று கூறி த.வெ.க தலைவர் விஜய்-யின் கருத்துக்கு அமைச்சர் சேகர் பாபு பதிலடி கொடுத்துள்ளார்.

Advertisment
Advertisement

இதுதொடர்பாக சென்னையில் கருணை இல்லங்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கும் விழாவில் பேசிய அமைச்சர் சேகர் பாபு, "200 என்ற நம்பிக்கை வீணாகும் என்று சிலர் அதிமேதாவிகளாக, தற்குறிகளாக களத்திற்கே வராத ஒருவர் தி.மு.க. குறித்து பேசிக்கொண்டிருக்கிறார். 2026 சட்டமன்றத் தேர்தலில் 200 அல்ல 234 தொகுதிகளையும் தி.மு.க. கைப்பற்றும். 

வில்லில் இருந்து புறப்பட்ட அம்பாக, தி.மு.க. மீது எப்படியெல்லாம் இதுபோன்ற அவதூறுகள் பரப்பப்டுகிறதோ, அப்போதெல்லாம் 80 கிமீ வேகத்தில் பயணிக்கும் தி.மு.க. தொண்டன் 100 கி.மீ. வேகத்தில் பயணிப்பான். மீண்டும் முதலமைச்சர் ஸ்டாலினை அரியணை ஏற்றும் வரை எங்களுடைய வேகம் குறையாது." என்று அவர் கூறியுள்ளார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Dmk Actor Vijay Tamilaga Vettri Kazhagam Minister PK Sekar Babu
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment