/tamil-ie/media/media_files/uploads/2023/01/tamil-indian-express-2023-01-17T125805.946.jpg)
Tamil Nadu Higher Education Minister Ponmudi's brother and Dr Thiagarajan passed away today due to ill health tamil news
தமிழ்நாடு உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடியின் சகோதரரும், பிரபல சிறுநீரக மருத்துவருமான க.தியாகராஜன் உடல்நலக்குறைவால் இன்று அதிகாலை சென்னையிலுள்ள தனியார் மருத்துவமனையில் காலமானார். அவருக்கு வயது 66. மறைந்த தியாகராஜனுக்கு மனைவி மருத்துவர் பத்மினி, மகன்கள் திலீபன், சிட்டிபாபு ஆகியோர் உள்ளனர்.
இதைத் தொடர்ந்து, விழுப்புரம் கிழக்கு புதுச்சேரி சாலையிலுள்ள மரகதம் மருத்துவமனையில் தியாகராஜனின் உடல் உறவினர்கள், கட்சியினர், பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. தனது சகோதரர் உடலுக்கு அமைச்சர் பொன்முடி மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார். இன்று மாலை 4 மணிக்கு இறுதிச்சடங்கு நடைபெறும் என குடும்பத்தினர் அறிவித்துள்ளனர்.
அமைச்சர் பொன்முடி சகோதரர் க.தியாகராஜன் மறைவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
/tamil-ie/media/media_files/uploads/2023/01/tamil-indian-express-2023-01-17T124958.160.jpg)
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், "உயர்கல்விதுறை அமைச்சர் க.பொன்முடி அவர்களின் சகோதரர் மருத்துவர் க.தியாகராஜன் (65) அவர்கள் மறைவெய்தினார் என்ற செய்தியால் மிகவும் வேதனையுற்றேன். உடன்பிற்ந்த தம்பியை இழந்து தவிக்கும் பொன்முடி அவர்களுக்கும் அவர்தம் குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்களையும் ஆறுதலையும் கூறிக்கொண்டு அவர்களது துயரில் பங்கெடுக்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.