/indian-express-tamil/media/media_files/njIL2jV6inlGlLz0XV9L.jpg)
"சிறு குறு தொழில் நிறுவனங்கள், புதிய தொழில் முனைவோர்களுக்கு இதில் வாய்ப்பு வழங்கப்படும். 3 ஆயிரத்து 200 பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும்." என்று அமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் கூறினார்.
கோவை விளாங்குறிச்சி பகுதியில் தகவல் தொழில்நுட்ப சிறப்பு பொருளாதார மண்டல வளாகத்தில் ரூ.114.16 கோடி செலவில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள கட்டிடத்தை தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இதனைத் தொடர்ந்து, அமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் செய்தியாளர்களை சந்தித்த பேசுகையில், "முந்தைய ஆட்சியில் அறிவிக்கப்பட்டு பல காரணங்களுக்காக நான்கு ஆண்டுகளுக்கு மேல் தாமதமாகி வந்த கட்டிடம் தற்போது ஏறத்தாழ நிறைவடையும் நிலையில் உள்ளது. இன்னும் இரண்டு வாரங்களுக்குள் முழுவதும் நிறைவடைந்து முதலமைச்சரால் திறந்து வைக்கப்படும்.
சிறு குறு தொழில் நிறுவனங்கள், புதிய தொழில் முனைவோர்களுக்கு இதில் வாய்ப்பு வழங்கப்படும். 3 ஆயிரத்து 200 பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும். நான் நிதி அமைச்சராக இருந்து போது, பெங்களூரு, ஹைதராபாத் ஆகிய நகரங்களுக்கு இணையான அனைத்து வசதிகளுடன் கூடிய ஹைடெக் சிட்டிகளாக கோவை, வடக்கு சென்னை, ஓசூர் உள்ளிட்ட பகுதிகளை உருவாக்குவது குறித்து அறிவித்து இருந்தேன். அதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. பணிகளை வேகப்படுத்தியும் வருகிறோம்.
நான் நிதி அமைச்சராக இருந்த போது ஜி.எஸ்.டியில் இருந்த குறைகளை சுட்டிக்காட்டினேன். நல்ல மனதோடு அனைவருக்கும் வாய்ப்பளித்து ஜி.எஸ்.டியில் திருத்தம் கொண்டு வர மத்திய அரசு நினைத்தால் விரைவில் இதில் திருத்தம் கொண்டு வரலாம்" என்று அவர் தெரிவித்தார்.
செய்தி: பி.ரஹ்மான் - கோவை மாவட்டம்.
“தமிழ்இந்தியன்எக்ஸ்பிரஸின்அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்டெலிகிராம்ஆப்பில்பெறhttps://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.