Advertisment

'தி.மு.க-வை எதிர்த்து வி.சி.க மாநாடு நடத்தவில்லை': அமைச்சர் முத்துசாமி பேச்சு

"தி.மு.க அரசை எதிர்த்து விடுதலை சிறுத்தைகள் கட்சி மாநாடு நடத்தவில்லை, கொள்கை ரீதியான முடிவுக்காக நடத்துகின்றனர்." என்று மதுவிலக்கு ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் முத்துசாமி கூறியுள்ளார்.

author-image
WebDesk
New Update
TN Minister S Muthusamy on Anti liquor meet VCK Thol Thirumavalavan Tamil News

"மதுக்கடைகள் தொடர்ந்து செயல்படுவதில் முதலமைச்சருக்கு எள்ளளவும் விருப்பம் இல்லை." என்று மதுவிலக்கு ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் முத்துசாமி கூறியுள்ளார்.

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மது ஒழிப்பு மாநாடு வரும் அக்டோபர் 2 ஆம் தேதி கள்ளக்குறிச்சியில் நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் அ.தி.மு.க-வும் பங்கேற்கலாம் என திருமாவளவன் அறிவித்தார். தொல். திருமாவளவன் தலைமையிலான வி.சி.க திமுக கூட்டணியில் அங்கம் வகித்து வரும் நிலையில், அக்கட்சியின் தலைவர் அ.தி.மு.க-வுக்கு திடீர் அழைப்பு விடுத்துள்ளது அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாகியுள்ளது.

Advertisment

இந்த நிலையில், ஈரோட்டில் மதுவிலக்கு ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் முத்துசாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது வி.சி.க மாநாடு குறித்தும், மதுவிலக்கு குறித்தும் அவரிடம் செய்தியாளர்கள் கேள்வியெழுப்பினர். அதற்கு பதிலளித்து அமைச்சர் முத்துசாமி, தி.மு.க அரசை எதிர்த்து வி.சி.க மாநாடு நடத்தவில்லை, கொள்கை ரீதியான முடிவுக்காக நடத்துகின்றனர் என்றும், வி.சி.க மாநாட்டில் அ.தி.முக பங்கேற்கலாம் என பொதுவான அழைப்பை தான் திருமாவளவன் விடுத்துள்ளார் என்றும் கூறியுள்ளார். 

இது தொடர்பாக அமைச்சர் முத்துசாமி மேலும் பேசுகையில், "மதுக்கடைகள் தொடர்ந்து செயல்படுவதில் முதலமைச்சருக்கு எள்ளளவும் விருப்பம் இல்லை. மதுக்கடைகளை என்றாவது ஒருநாள் மூடவேண்டும் என்றே முதலமைச்சர் நினைக்கிறார். ஒரே நாளில் உத்தரவு போட்டு மதுக்கடைகளை மூடி விடலாம். உடனடியாக மூடினால் என்ன நடக்கும் என்பதை ஆராய்ந்து தான் நடவடிக்கை எடுக்க முடியும். இங்குள்ள சூழலை பொறுத்து, அதற்கேற்ப நடவடிக்கை எடுக்கப்படும். தமிழகத்தில் படிப்படியாக மதுவிலக்கை கொண்டு வருவோம்." என்றும் அவர் கூறியுள்ளார். 

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

Dmk Thirumavalavan Vck
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment