Minister-p-k-sekar-babu | Tamil-nadu | Udhayanidhi-stalin: சென்னையில் நடந்த சனாதனம் ஒழிப்பு மாநாட்டில் பங்கேற்று சனாதனம் குறித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியது பெரும் சர்ச்சை ஏற்படுத்தியது. 'டெங்கு, மலேரியா, கொரோனாவை போன்று சனாதனத்தையும் ஒழிக்க வேண்டும்' என அவர் பேசிய நிலையில், அது இந்திய அளவில் பேசும் பொருளாக மாறியது. உதயநிதியின் பேச்சுக்கு பலரும் கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர். அதேவேளையில், அவரது பேச்சுக்கு ஆதரவாகவும் பலரும் பேசி வருகின்றனர்.
இந்நிலையில், 'ஒட்டுமொத்த சனாதானத்தையும் எதிர்க்கவில்லை. அதில் உள்ள சில கொள்கைகளை தான் எதிர்க்கிறோம்' என அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு புதிய விளக்கம் கொடுத்துள்ளார்.
அமைச்சர் சேகர்பாபு சேலம் கோட்டை மாரியம்மன் கோவிலில் ஆய்வு மேற்கொண்டார். அதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், "தமிழ்நாட்டில் அனைவருக்குமான சமத்துவ ஆட்சி நடைபெறுகிறது. எந்த இடத்தில் இந்து மதத்தை அவமதிக்கும் வகையில் இறை நம்பிக்கைக்கு எதிராக முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியுள்ளார். இறை நம்பிக்கை உள்ளவர்களையும் ஆதரிப்போம். இறை நம்பிக்கை இல்லாதவர்களையும் ஏற்போம்.
ஒட்டுமொத்த சனாதானத்தையும் எதிர்க்கவில்லை. அதில் உள்ள சில கொள்கைகளை தான் எதிர்க்கிறோம். என் மண் என் மக்கள் பயணம் தோல்வி அடைந்ததால் அண்ணாமலை குழம்பி போயுள்ளார். கோட்டை மாரியம்மன் கோவில் குடமுழுக்கு வருகிற அக்டோபர் 27ம் தேதி நடைபெறும்." என்று அமைச்சர் சேகர்பாபு கூறினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“