/indian-express-tamil/media/media_files/bLkNzQigNflxtn3tdcj7.jpg)
கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தில் அமைச்சர் சேகர் பாபு இன்று ஆய்வு மேற்கொண்டார்.
Minister PK Sekar Babu: சென்னை கோயம்பேடு மற்றும் புறநகர் பகுதியில் உள்ள ஜி.எஸ்.டி. சாலைகளில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையிலும், தென் மாவட்டங்களுக்கு செல்லும் பொதுமக்கள் எளிதாக பயணத்தை மேற்கொள்வதற்காகவும், வண்டலூர் அருகே கிளாம்பாக்கத்தில் 88.52 ஏக்கரில், சுமார் 88.52 ஏக்கர் நிலப்பரப்பில் ரூ.400 கோடி மதிப்பீட்டில் நவீன தொழில்நுட்ப வசதிகளுடன் புறநகர் பேருந்து நிலையம் கட்டப்பட்டுள்ளது. இந்த பேருந்து நிலையத்திற்கு கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையம் என பெயரிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், இந்தப் பேருந்து நிலையத்தை கடந்த சனிக்கிழமை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். இந்த பேருந்து நிலையத்தில் இருந்து நெல்லை, நாகர்கோவில், தூத்துக்குடி, கன்னியாகுமரி, மதுரை, ராமநாதபுரம், தேனி, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களுக்கு பேருந்து செல்கின்றன.
ஆய்வு
இந்த நிலையில், இந்தப் பேருந்து நிலையத்தில் பொதுமக்களுக்கான வசதிகள் குறைவாக உள்ளதாக புகார்கள் எழுந்துள்ளது. இதனையடுத்து கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் அமைச்சர் சேகர்பாபு இன்று ஆய்வு செய்தார். அப்போது பயணிகளின் கருத்துக்களை கேட்டறிந்தார். மேலும் பேருந்து நிலைய வளாகத்தில் உள்ள கழிவறைகளில் தண்ணீர் வசதிகள், நடைபாதைகள் முறையாக தூய்மை செய்யப்படுகிறதா என்றும் பார்வையிட்டார்.
இதன்பின்னர், அமைச்சர் சேகர்பாபு செய்தியாளர்களை சந்தித்துப் பேசுகையில், "கிளாம்பாக்கம் சர்வீஸ் சாலையில் பள்ளி நேரங்களில் பேருந்துகள் இயக்கப்படாது. பள்ளி மாணவர்கள் பாதிக்கப்படாதவாறு பேருந்துகள் இயக்கப்படும்.
புதிய ஆம்னி பேருந்து நிலையம் முடிச்சூரில் கட்டப்படுகிறது. பயணிகளின் பாதுகாப்புக்காக கிளாம்பாக்கத்தில் காவல்நிலையம் அமைக்கும் பணி பொங்கலுக்கு பின் தொடங்கும். பயணிகளுக்கு இடையூறாக உள்ள சுவரை அகற்றும் பணி நடைபெற்று வருகிறது.
அ.தி.மு.க ஆட்சியில் கிளாம்பாக்கத்தில் 30% பணிகள் மட்டுமே நிறைவடைந்தன. மத்திய இணையமைச்சர் எல்.முருகன் பேருந்து நிலையைத்தை சுற்றிப் பார்த்து குறைகளை சொல்லலாம்." என்று அவர் கூறினார்.
“தமிழ்இந்தியன்எக்ஸ்பிரஸின்அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்டெலிகிராம்ஆப்பில்பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.