'மக்களிடம் கருத்து கேட்க முடிவு': கோயம்பேடு பஸ் நிலையம் குறித்து அமைச்சர் சேகர்பாபு தகவல்

கோயம்பேடு பேருந்து நிலையம் இன்னும் ஓராண்டிற்கு தேவைப்படும் என்றும், கோயம்பேடு பேருந்து நிலையத்தை எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என மக்களிடம் கருத்து கேட்கப்படும் என்றும் அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.

கோயம்பேடு பேருந்து நிலையம் இன்னும் ஓராண்டிற்கு தேவைப்படும் என்றும், கோயம்பேடு பேருந்து நிலையத்தை எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என மக்களிடம் கருத்து கேட்கப்படும் என்றும் அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.

author-image
WebDesk
New Update
TN Minister Sekar babu on koyambedu bus stand Tamil News

'கோயம்பேடு பேருந்து நிலையம் இன்னும் ஓராண்டிற்கு தேவைப்படும்' என்று அமைச்சர் சேகர்பாபு கூறியுள்ளார்.

Listen to this article
0.75x1x1.5x
00:00/ 00:00

தமிழகத்தில் உள்ள 260 கோவில்களுக்கு கையடக்க கருவிகள் வழங்கும் நிகழ்ச்சி சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் அலுவகத்தில் நடைபெற்றது. விரைவாக கட்டண சீட்டுகளை வழங்கிடும் வகையில் 315  கையடக்க கருவிகளை அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு வழங்கினார். 

Advertisment

இதன்பின்னர் செய்தியாளர்களை சந்தித்துப் பேசிய அமைச்சர் சேகர்பாபு, கோயம்பேடு பேருந்து நிலையம் இன்னும் ஓராண்டிற்கு தேவைப்படும் என்றும், கோயம்பேடு பேருந்து நிலையத்தை எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என மக்களிடம் கருத்து கேட்கப்படும் என்றும் கூறியுள்ளார். 

"கோயம்பேடு பேருந்து நிலையம் இன்னும் ஒரு வருட காலத்திற்கு தேவைப்படுகிறது. கோயம்பேடு பேருந்து நிலையத்திருந்து இயக்கப்படும் அனைத்து பேருந்துகளும் கிளாம்பாக்கத்திலிருந்து இயக்கப்படும் நிலையில், கோயம்பேடு பேருந்து நிலையம் அமைந்துள்ள இடத்தினை மக்களின் பயன்பாட்டிற்கு உகந்த வகையில், அவர்களின் கருத்துகளை கேட்டறிந்த பின்னர், முதல்வரின் கவனத்துக்கு கொண்டு சென்று சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் இறுதி முடிவினை எடுக்கும்." என்று அமைச்சர் சேகர்பாபு கூறியுள்ளார். 

தமிழ்இந்தியன்எக்ஸ்பிரஸின்அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்டெலிகிராம்ஆப்பில்பெற  https://t.me/ietamil

Advertisment
Advertisements
Minister PK Sekar Babu

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: