V Senthil Balaji: சட்ட விரோத பணப்பரிமாற்ற வழக்கில் கடந்த ஜூன் மாதம் 14ம் தேதி அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். 5 நாள்கள் காவலில் எடுத்து விசாரித்த அமலாக்கத்துறை விசாரணைப் பிறகு ஆகஸ்ட் 12ம் தேதி குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தனர். இந்த வழக்கில் அவருக்கு நீதிமன்ற காவல் தொடர்ந்து நீட்டிக்கப்பட்டு வருகிறது. இதனால் அவர் புழல் சிறையில் நீதிமன்ற காவலில் இருந்து வருகிறார்.
19 முறை காவல் நீடிப்பு
இந்நிலையில், செந்தில்பாலஜியின் நீதிமன்ற காவல் நேற்று புதன்கிழமையுடன் (பிப்ரவரி.7) முடிவடைந்ததால் புழல் சிறையிலிருந்து காணொலி காட்சி மூலம் சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி முன்பாக அமைச்சர் செந்தில் பாலாஜி ஆஜர்படுத்தப்பட்டார்.
அப்போது நீதிபதி செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவலை வரும் பிப்ரவரி 15ஆம் தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டார். இதன் மூலம் 19வது முறையாக செந்தில் பாலாஜிக்கு நீதிமன்றக் காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது.
திடீர் சோதனை
இந்நிலையில், கரூரில் அமைச்சர் செந்தில் பாலாஜி இல்லத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று காலை முதல் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கரூர் மாவட்டம் ராமேஸ்வரபட்டியில் உள்ள அமைச்சர் செந்தில் பாலாஜி இல்லத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்துகின்றனர். கேரள பதிவெண் கொண்ட வாகனங்களில் வந்த 5-க்கும் மேற்பட்ட அதிகாரிகள் தற்போது அமைச்சர் செந்தில்பாலாஜி இல்லத்தில் அவரது குடும்பத்தினரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
/indian-express-tamil/media/post_attachments/2c598ad4-893.jpg)
செந்தில் பாலாஜி புதியதாக கட்டி வரும் வீட்டின் மதிப்பு, பரப்பளவு, செய்யப்பட்டுள்ள செலவுகள் குறித்தும், செந்தில் பாலாஜியின் நண்பர் நடத்தும் உணவகத்திலும் கடந்த ஜனவரி 11ஆம் தேதி அன்று வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி இருந்தது. இந்த நிலையில், கரூர் ராமேஸ்வரப்பட்டியில் உள்ள இல்லத்தில் தற்போது அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
/indian-express-tamil/media/post_attachments/b68f6eaf-b63.jpg)
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“