வீடுகளுக்கு மின் கட்டண உயர்வு இல்லை; இலவச மின்சார சலுகை தொடரும்: அமைச்சர் சிவசங்கர் விளக்கம்

ஜூலை மாதம் முதல் மின் கட்டணத்தை உயர்த்த இருப்பதாக தகவல் வெளியாகிய நிலையில், "வீட்டு மின் இணைப்புகளுக்கு எவ்வித மின் கட்டண உயர்வும் இல்லை. அனைத்து இலவச மின்சாரச் சலுகைகளும் தொடரும்." என்று அமைச்சர் சிவசங்கர் விளக்கம் அளித்துள்ளார்.

author-image
WebDesk
New Update
 TN Minister SS Sivasankar on house ELECTRICITY BILL HIKE Tamil News

ஜூலை மாதம் முதல் மின் கட்டணத்தை உயர்த்த இருப்பதாக தகவல் வெளியாகிய நிலையில், "வீட்டு மின் இணைப்புகளுக்கு எவ்வித மின் கட்டண உயர்வும் இல்லை. அனைத்து இலவச மின்சாரச் சலுகைகளும் தொடரும்." என்று அமைச்சர் சிவசங்கர் விளக்கம் அளித்துள்ளார்.

தமிழ்நாடு மின்சார வாரியம் வருகிற ஜூலை மாதம் முதல் மின் கட்டணத்தை உயர்த்த இருப்பதாக தகவல் வெளியாகியது . கடந்தாண்டு  ஜூலை மாதம் 4.8 சதவீதமும், 2023 ஜூலை மாதம் 2.18 சதவீதமும் மின்கட்டணம் உயர்த்தப்பட்ட நிலையில், இந்த ஆண்டும் உயர்த்தப்படலாம் என்று கூறப்பட்டது. 

Advertisment

இந்த ஆண்டில் 3 சதவீதம் மின் கட்டணத்தை உயர்த்த ஒழுங்குமுறை ஆணையம் மின்சார வாரியத்திற்கு பரிந்துரை செய்ததாக தகவல் வெளியாகியது. இந்நிலையில், தமிழக போக்குவரத்து மற்றும் மின்சாரத் துறை அமைச்சர் சிவசங்கர் இதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "வீட்டு மின் இணைப்புகளுக்கு எவ்வித மின் கட்டண உயர்வும் இல்லை. அனைத்து இலவச மின்சாரச் சலுகைகளும் தொடரும். கடந்த சில நாட்களாக செய்தி ஊடகங்களில் மின் கட்டண உயர்வு குறித்து அதிகாரபூர்வமற்ற தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளது. தற்சமயம் மின் கட்டண உயர்வு குறித்து எவ்வித ஆணையும், தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தினால் வெளியிடப்படவில்லை.

எனினும் ஒழுங்குமுறை ஆணையம், மின்கட்டணம் தொடர்பான ஆணை வழங்கிடும்போது, அதனை நடைமுறைப்படுத்துகையில் வீட்டு மின் நுகர்வோர்களுக்கு எவ்வித மின் கட்டண உயர்வும் இருக்கக் கூடாது எனவும், தற்போது வழங்கப்படும் அனைத்து இலவச மின்சாரச் சலுகைகளும் தொடரவேண்டும், எனவும் முதல் - அமைச்சர் அறிவுறுத்தியுள்ளார்." என்று அவர் தெரிவித்துள்ளார்.

S S Sivasankar

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: