Advertisment

முதியோர் உதவித்தொகை ரூ. 1,200 ஆக உயர்வு: நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு தகவல்

முதியோர், ஆதரவற்றோர் மற்றும் கைம்பெண்களுக்கான மாத உதவித்தொகை ரூ.1,200 ஆக உயர்த்தப்பட்டுள்ளது என தமிழக நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Minister Thangam Thanarasu has condemned the violent incident in the Neyveli protest

அமைச்சர் தங்கம் தென்னரசு

தமிழ்நாடு அமைச்சரவை கூட்டம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று நடைபெற்றது. இந்த அமைச்சரவை கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறியது பின்வருமாறு:-

Advertisment

தமிழ்நாட்டில் சுமார் 30 லட்சம் பேர் சமூக நல பாதுகாப்பு திட்டங்கள் மூலமாக பயனடைகின்றனர். ஓய்வூதியத்திற்கு விண்ணப்பித்து காத்திருக்ககூடியவர்களுக்கும் விரைவில் ஓய்வுதியம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். சமூக நலத் திட்டங்களுக்கு ரூ. 845 கோடி கூடுதலாக செலவாகும்.

முதியோர், ஆதரவற்றோர் மாத உதவித்தொகை ரூ.1,200 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. கைம்பெண்களுக்கான உதவித்தொகையும் ரூ. 1000-லிருந்து ரூ. 1,200 ஆக உயர்த்தப்பட உள்ளது. மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகை ரூ. 1,500 ஆக உயர்த்தப்பட உள்ளது. உயர்த்தப்பட்ட உதவித்தொகைகள் ஆகஸ்ட் மாதம் முதல் வழங்கப்படும்.

கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டம் தொடர்பான முகாம்கள் 3 கட்டமாக நடத்தப்பட உள்ளன." என்று நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு கூறினார்.

மணிப்பூர் கலவரத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஏற்கனவே கண்டனம் தெரிவித்துள்ளார். மணிப்பூர் சம்பவம் குறித்து அ.தி.மு.க இதுவரை வாய் திறக்காதது ஏன்? என்றும் அமைச்சர் தங்கம் தென்னரசு கேள்வி எழுப்பினார்.

தமிழ்  இந்தியன்  எக்ஸ்பிரஸின்  அனைத்து செய்திகளையும் உடனுக்குடன்  டெலிகிராம்  ஆப்பில்  பெற https://t.me/ietamil

Thangam Thennarasu Pension Scheme Tamilnadu
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment