udhayanidhi-stalin | chennai | ar-rahman: தமிழ் திரையுலகின் முன்னணி இசையமைப்பாளரான ஏ.ஆர்.ரகுமானின் 'மறக்குமா நெஞ்சம்' இசை நிகழ்ச்சி செப்டம்பர் 10-ந்தேதி சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் நடைபெற்றது. சுமார் 25 ஆயிரம் பேர் கலந்து கொள்ளும் இந்த நிகழ்ச்சியில் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டதால் தள்ளு முள்ளு ஏற்பட்டது. அதுமட்டுமல்லாமல் அடிப்படை வசதி எதுவும் இல்லாமல் ரசிகர்கள் சிரமப்பட்டனர்.
இந்த நிகழ்ச்சிக்கு டிக்கெட் வாங்கிச் சென்று உள்ளே நுழைய முடியாமல் பல ரசிகர்கள் ஏமாற்றத்துடன் திரும்பியுள்ளனர். இந்த இசை நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் மீது குற்றச்சாட்டு எழுந்து வரும் நிலையில், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் மீதும் சமூக வலைதளங்களில் சிலர் கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர்.
இந்நிலையில், இசை நிகழ்ச்சி குளறுபடியை வைத்து, வலதுசாரி கருத்துடையவர்கள் சமூக வலைதள பக்கங்களில் ஏ.ஆர் ரகுமானை குறி வைக்கிறார்களாக என்பது குறித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பதிலளித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் பேசுகையில், "நிகழ்ச்சிக்கு கடைசி நேரத்தில் அதிக கூட்டம் வந்ததாக காரணம் சொல்லப்படுகிறது. இதுபோன்று நடக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும். காவல்துறை உரிய நடவடிக்கை எடுத்து வருகிறது" என்று கூறினார்.
அப்போது நிருபர் ஒருவர், சமூக வலைதளங்களில் ஏ.ஆர் ரகுமானை டார்கெட் செய்து நிறைய விமர்சனங்கள் வருகிறேதே அதனை கவனித்தீர்களாக? என்றும், குறிப்பாக வலதுசாரி கருத்துடையவர்களிடம் இருந்து வருகிறேதே? என்றும் கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், "எதாவது காரணம் கிடைக்காதான்னு காத்திருப்பார்கள். இனிமேல் இதுபோன்று நடக்காமல் பார்த்துகனும். யார் காரணம் என கண்டுபிடித்து, அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்" என்று கூறினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“