/indian-express-tamil/media/media_files/YwK8JcNNAF5OcdzyNMvy.jpg)
தமிழில் பதவியேற்ற திருமாவளவன், ஜனநாயகம் வாழ்க, அரசியல் சாசனம் வாழ்க என ஆங்கிலத்தில் குறிப்பிட்டார்.
18-வது நாடாளுமன்ற மக்களவை நேற்று திங்கள்கிழமை கூடியது. பிரதமர் மோடியை தொடர்ந்து மத்திய அமைச்சர்களும், எம்.பி-க்களும் பதவி ஏற்றனர். இந்நிலையில், 2-வது நாளாக இன்று செவ்வாய்க்கிழமை மக்களவை கூடியதும் தமிழகம், புதுச்சேரியை சேர்ந்த 40 எம்.பிக்கள் அடுத்தடுத்து பதவியேற்றுக்கொண்டனர்.
இந்த நிலையில், தமிழ்நாட்டைச் சேர்ந்த எம்.பி.க்கள் தமிழில் பதவியேற்றுக்கொண்டனர். அவர்கள் பதவியேற்றுகையில் அவர்களது கைகளில் கையடக்க அரசியல் சாசன புத்தகம் இருந்தது.
தமிழக எம்.பி.க்கள் பதவியேற்றுக்கொண்டபோது கருணாநிதி,ஸ்டாலின், உயதநிதி ஆகியோரின் பெயர்களை குறிப்பிட்டனர். கதிர் ஆனந்த், கோவை எம்.பி. கணபதி ராஜ்குமார், தஞ்சை எம்.பி முரசொலி உள்ளிட்ட எம்.பி.க்கள் பதவியேற்றபோது வருங்காலம் எங்கள் உதயநிதி. வாழ்க தமிழ்நாடு, ஸ்டாலின் வாழ்க என முழக்கமிட்டனர். பதவியேற்றதும் நீட் தேர்வை தடை செய்ய வேண்டும் என்று தயாநிதி மாறன் எம்.பி.முழக்கமிட்டார்.
திருவள்ளூர் எம்.பி. சசிகாந்த் செந்தில் தமிழில் பதவியேற்றுக்கொண்டார். "தலித்துகள், சிறுபான்மையினர் மீதான தாக்குதலை நிறுத்துக" என அவர் கூறியதும் பா.ஜ,க எம்.பி.க்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். தமிழில் பதவியேற்ற திருமாவளவன், ஜனநாயகம் வாழ்க, அரசியல் சாசனம் வாழ்க என ஆங்கிலத்தில் குறிப்பிட்டார். மதுரை எம்.பி சு.வெங்கடேசன், 'தமிழ் வாழ்க, மார்க்சியம் வெல்க' என்று கூறி பதவியேற்றார்.
"தமிழ் மக்கள் வாழ்க, ராகுல் காந்தி வாழ்க, தமிழ் கடவுள் முருகன் மீது உளமார உறுதி கூறுகிறான்" என கூறி மக்களவை உறுப்பினராக பதவியேற்றார் மயிலாதுறை எம்.பி சுதா. "பெருந்தலைவர் காமராஜர் புகழ் வாழ்க, ராஜீவ் காந்தி புகழ் வாழ்க" என கூறி மக்களவை உறுப்பினராக பதவியேற்றார் எம்.பி விஜய் வசந்த். "வாழ்க சமூக நீதி அரசியல் வாழ்க சமத்துவம் வாழ்க மதசார்பின்மை...பரவட்டும் மனிதநேயம்" என்று கூறி மக்களவை உறுப்பினராக பதவியேற்றார் திருச்சி எம்.பி துரை வைகோ.
“தமிழ்இந்தியன்எக்ஸ்பிரஸின்அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்டெலிகிராம்ஆப்பில்பெறhttps://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.