தமிழ்நாடு முஸ்லிம் லீக் கட்சித் தலைவர் முஸ்தபா, 2026 சட்டமன்றத் தேர்தலில், த.வெ.க பொதுச்செயலாளர் ஆனந்த், தேர்தல் பிரிவு பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜூன் ஆகியோரை சந்தித்து, தமிழக வெற்றிக் கழகத்துக்கு தனது ஆதரவைத் தெரிவித்தார்.
மேலும், “விஜய் உடன் கூட்டணி வைக்க தயாராக இருக்கிறோம். வரும் சட்டமன்ற தேர்தலில் நிச்சயம் தமிழக வெற்றிக் கழக கூட்டணியில் எங்கள் கட்சி இணையும்” என்று முஸ்தபா கூறினார். இதன் மூலம், த.வெ.க கூட்டணியில் இணைந்த முதல் கட்சியாக தமிழ்நாடு முஸ்லிம் லீக் இடம்பெறுகிறது.
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சியைத் தொடங்கி, கட்சி கட்டமைப்பை உருவாக்கி வலுப்படுத்தி வருகிறார். மாவட்டப் பொறுப்பாளர்கள், மாநிலப் பொறுப்பாளர்களை அறிவித்துள்ளார். தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுக்குழு தொடர்பாக விஜய் பிஸியாக இருக்கிறார். அதே நேரத்தில், தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோருடனான சந்திப்பின் மூலம் தமிழக அரசியலில் தனது தேர்தல் வியூகம் குறித்து பேசுபொருளாக்கினார்.
தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டில், பேசிய விஜய், நம்மை நம்பி கூட்டணிக்கு வருபவர்களுக்கு, ஆட்சியிலும் அதிகாரத்திலும் பங்கு அளித்து அதிகாரப் பகிர்வு செய்யப்படும் என்று கூறினார். இதன் மூலம், விஜய் கட்சி தொடங்கிய முதல் மாநாட்டிலேயே கூட்டணிக்கான கதவைத் திறந்து வைத்தார். ஆனால், விஜய்யின் தமிழக வெற்றி கழகத்துடன் கூட்டணி அமைப்பதற்கு எந்த கட்சியும் முன்வரவில்லை.
இந்நிலையில், தமிழ்நாடு முஸ்லிம் லீக் தலைவர் முஸ்தபா, 2026 சட்டமன்றத் தேர்தலில், த.வெ.க பொதுச்செயலாளர் ஆனந்த், தேர்தல் பிரிவு பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜூன் ஆகியோரை சந்தித்துப் பேசினார்.
மேலும், “விஜய் உடன் கூட்டணி வைக்க தயாராக இருக்கிறோம். 2026 சட்டமன்ற தேர்தலில் நிச்சயம் தமிழக வெற்றிக் கழக கூட்டணியில் எங்கள் கட்சி இணையும்” என்று தமிழ்நாடு முஸ்லிம் லீக் தலைவர் முஸ்தபா கூறினார். இதன் மூலம், த.வெ.க கூட்டணியில் இணைந்த முதல் கட்சியாக தமிழ்நாடு முஸ்லிம் லீக் இடம்பெறுகிறது.
தமிழ்நாடு முஸ்லிம் லீக் தலைவர் முஸ்தபா, 2026 சட்டமன்றத் தேர்தலில், த.வெ.க உடன் கூட்டணி வைப்பது தொடர்பாக, அக்கட்சியின் பொதுச்செயலாளர் ஆனந்த், தேர்தல் பிரிவு பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜூன் ஆகியோருடன் செவ்வாய்க்கிழமை (பிப்ரவரி 18) சந்தித்துப் பேசியதாக தகவல் வெளியானது. இதையடுத்து, முஸ்தபா, 2026 தேர்தலில் தமிழக வெற்றிக் கழக கூட்டணியில் தமிழக முஸ்லிம் லீக் இணையும் என்று கூறியுள்ளார்.
இது குறித்து பேசிய தமிழ்நாடு முஸ்லிம் லீக் கட்சி தலைவர் முஸ்தபா அவர், "திருப்பரங்குன்றம் விவகாரம், வக்பு வாரிய சொத்து மீட்பு உள்ளிட்ட பல விவகாரங்களில் திமுக இஸ்லாமியர்களை ஏமாற்றி வருகிறது. விஜய் கட்சியில் துணை தலைவர், மாவட்ட செயலாளர் உள்ளிட்ட பல பொறுப்புகளில் இஸ்லாமியர்களை அமர்த்தி இருக்கிறார். குறிப்பாக மாநில மாநாட்டிலேயே ஹிஜாப் அணிந்த ஒரு இஸ்லாமிய பெண்ணை மேடையில் அமர வைத்தார். சமூக நீதி கட்சி, சிறுபான்மையினருக்கான கட்சி என சொல்லும் திமுக கூட இதுவரை அவ்வாறு செய்ததில்லை.
பாபு என்ற இஸ்லாமியரை மாவட்ட செயலாளராகவும், ஜாஸ்மின் என்ற இஸ்லாமிய இளம் பெண்ணை மாநில பொறுப்பிலும் நியமித்திருக்கிறார்.
பா.ஜ.க-வை கொள்கை எதிரியாக அறிவித்தது எங்களுக்கு நம்பிக்கையளிக்கிறது. அதன் காரணமாகவே, அவருடன் கூட்டணி வைக்க தயாராக இருக்கிறோம். ரம்ஜான் நோன்பு திறப்பில் கலந்து கொள்ள அழைப்பு விடுத்துள்ளோம். கண்டிப்பாக கலந்து கொள்வதாக விஜய் உறுதி அளித்துள்ளார்” என்று முஸ்தபா கூறினார்.