Tamil-nadu: இன்று மாலை 6 மணி முதல் ஆம்னி பேருந்துகள் வேலை நிறுத்தம் என தென்மாநில ஆம்னி பேருந்து உரிமையாளர் கூட்டமைப்பு அறிவித்திருந்தது இந்த நிலையில், அனைத்து ஆம்னி பேருந்துகளும் வழக்கம்போல் இயங்கும் என தமிழ்நாடு ஆம்னி பேருந்து உரிமையாளர் சங்கம் அறிவித்துள்ளது.
இது தொடர்பாக தமிழ்நாடு ஆம்னி பேருந்து உரிமையாளர் சங்க செயலாளர் மாறன் செய்தியாளர் சந்திப்பில் பேசியது பின்வருமாறு:-
தொடர் விடுமுறை காரணமாக சொந்த ஊர்களுக்குச் சென்ற மக்கள் திரும்ப வசதியாக ஆம்னி பேருந்துகள் இயக்கப்படும். ஆம்னி பேருந்துகள் இயங்கும். மக்கள் பீதியடைய வேண்டாம். 90 சதவீத பேருந்துகள் எங்கள் சங்கத்தில் உள்ளன. எங்கள் சங்கத்தில் 1,500 பேருந்துகள் உள்ளன. அவை அனைத்தும் இயங்கும். வெளிமாநில பதிவு எண் கொண்ட வாகனங்களே சிறைப்பிடிக்கப்பட்டுள்ளன.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
அறிக்கை
இந்நிலையில், “தமிழ்நாடு ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தைச் சேர்ந்த 80% பேருந்துகளும் இன்று வழக்கம்போல் இயங்கும். ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் அனைவரும், இன்று கட்டாயம் பேருந்துகள் இயங்கும் என்பதை தங்களது பயணிகளுக்கு குறுஞ்செய்தி மூலம் தெரிவிக்க வேண்டும்” என்று தமிழ்நாடு ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
/indian-express-tamil/media/post_attachments/ab28a4b3-552.jpg)
முன்னதாக, அதிக கட்டணம் வசூல் எனக்கூறி சிறை பிடிக்கப்பட்ட 120 ஆம்னி பேருந்துகளை விடுவிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்த தென் மாநில ஆம்னி பேருந்துகள் கூட்டமைப்பு இன்று மாலை 6 மணி முதல் ஆம்னி பேருந்துகள் இயங்காது என்று அறிவித்தது. ஆம்னி பேருந்துகளுக்கு கட்டணம் நிர்ணயம் இல்லாத போதிலும் பயணிகளை பாதிக்காத வண்ணம் கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது என்றும் ஆம்னி பேருந்துகள் கூட்டமைப்பு சார்பில் தெரிவிக்கப்பட்டது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“