/tamil-ie/media/media_files/uploads/2019/11/a518.jpg)
TN people will create mystery at 2021 says rajinikanth - '2021ல் தமிழக மக்கள் 100 சதவிகிதம் அதிசயத்தையும், அற்புதத்தையும் நிகழ்த்துவார்கள்' - ரஜினிகாந்த்
2021ல் தமிழக மக்கள் மிகப்பெரிய அதிசயத்தையும், அற்புதத்தையும் நிகழ்த்துவார்கள் என்று ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.
கோவாவில் நடைபெற்று வரும் சர்வதேச திரைப்பட விழாவில், ரஜினிகாந்திற்கு 'ஐகான் ஆஃப் கோல்டன் ஜூப்ளி' விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து இன்று சென்னை திரும்பிய ரஜினியிடம், விமான நிலையத்தில் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
மேலும் படிக்க - சமீபத்திய தமிழக செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே க்ளிக் செய்யவும்
அதில், 'நீங்கள் கமல்ஹாசனுடன் இணைந்தால், முதல்வர் வேட்பாளர் யார்?' என்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த ரஜினி, "அது இப்போது எடுக்க வேண்டிய முடிவல்ல. அந்த நேரத்தில், அந்த சூழ்நிலையில், கட்சி ஆரம்பித்த பிறகு, கட்சியினரிடம் ஆலோசனை நடத்தி முடிவு எடுக்கப்பட வேண்டிய ஒன்று. அது வரைக்கும் அதைப் பற்றி நான் பேச விரும்பல" என்றார்.
பிறகு, அமைச்சர் ஜெயக்குமார் கூறிய, திராவிட பூமியில் ஆன்மீக அரசியலுக்கு இடமில்லை என்ற கூறியது குறித்து ரஜினியிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு, "2021ல் தமிழக மக்கள், மிகப்பெரிய அற்புதத்தை, அதிசயத்தை நூற்றுக்கு நூறு சதவிகிதம் நிகழ்த்துவார்கள்" என்று தெரிவித்துள்ளார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.