தமிழ்நாடு காவல்துறையின் ஃபேஸ் ரெகக்னிஷன் போர்ட்டல் கடந்த வெள்ளிக்கிழமை (மே 3, 2024) அடையாளம் தெரியாத நபர்களால் ஹேக் செய்யப்பட்டதாக தகவல் கூறப்பட்டுள்ளது. தமிழ்நாடு காவல் துறையில் குற்றவாளிகள் குறித்த தரவுகள், புகார் குறித்த தரவுகளை சேமித்து வைக்க 'ஃபேஸ் ரெகக்னிஷன்' என்ற போர்ட்டல் உள்ளது. இந்த போர்ட்டல் ஹேக் செய்யப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.
குற்றவாளிகளை பிடிக்க, காணாமல் போனவர்களின் விவரங்கள் மற்றும் கண்காணிப்பு பணிகளுக்கு போலீசார் இந்த சாப்ட்வேரை பயன்படுத்துகின்றனர். அதோடு, 50,000க்கும் மேற்பட்ட போலீசாரின் விவரங்கள், எஃப்.ஐ.ஆர் எண்கள், தேதிகள், காவல்துறை அதிகாரிகளின் முகவரிகள் மற்றும் தொடர்பு விவரங்கள் போன்ற தரவுகள் இந்த போர்ட்டலில் உள்ளதாக கூறப்பட்டுள்ளது.
இந்த போர்ட்டலை அடையாளம் தெரியாத நபர்கள் ஹேக் செய்து டேட்டாகளை அணுகியதாகவும் தகவல் கூறப்பட்டுள்ளது.
இதுகுறித்து மூத்த போலீஸ் அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, “இதுபோன்ற சர்வர் மீறல் எதுவும் ஏற்படவில்லை. அட்மின் லாக்கின் செய்யும் போது பிரச்சனை ஏற்பட்டது. அது உடனடியாக சரி செய்யப்பட்டு மாற்றப்பட்டது. அச்சம் கொள்ளத் தேவையில்லை” என்று கூறினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“