Advertisment

தமிழகத்தில் சாலை விபத்துகளால் ஏற்படும் உயிரிழப்பு எண்ணிக்கை கணிசமாக குறைவு: டி.ஜி.பி சங்கர் ஜிவால்

விதிகளை மீறி வாகனங்களை ஓட்டி சென்றதற்காக 39,000 பேரின் ஓட்டுநர் உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

author-image
WebDesk
New Update
notice to remove encroachments in Trichy

கடந்தாண்டு ஜூலை மாதத்தை ஒப்பிடுகையில் இந்த ஆண்டு ஜூலை மாதத்தில் சாலை விபத்துகளால் ஏற்பட்ட உயிரிழப்பு எண்ணிக்கை குறைந்துள்ளதாக  டி.ஜி.பி சங்கர் ஜிவால் தெரிவித்துள்ளார்.  

Advertisment

இதுதொடர்பாக டி.ஜி.பி சங்கர் ஜிவால் வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில், "தமிழகம் முழுவதும் விபத்துகளை குறைப்பதற்காக பல்வேறு நடவக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இதன்மூலம், கடந்த ஆண்டு ஜூலை மாதத்தோடு ஒப்பிடுகையில் இந்த ஆண்டு ஜூலை மாதம் சாலை விபத்துகளால் ஏற்பட்ட உயிரிழப்பு எண்ணிக்கை 5 சதவீதம் குறைந்துள்ளது. இந்த ஆண்டில் கடந்த ஜூலை மாதம் வரை தமிழகம் முழுவதும் 10,066 உயிரிழப்பு விபத்துகள் நடந்துள்ளன. இந்த விபத்துகள் மூலம் 10,536 பேர் உயிரிழந்துள்ளனர்.

கடந்த ஆண்டு ஜூலை மாதம் முடிவில் 10 ஆயிரத்து 589 உயிரிழப்பு சாலை விபத்துகள் நடந்தன. இதன் மூலம், 11 ஆயிரத்து 106 பேர் உயிரிழந்தனர். கடந்தாண்டு ஒப்பிடும்போது இந்த ஆண்டு உயிரிழப்பு சாலை விபத்துகள் 5 சதவீதம் குறைவாகும். அதாவது 523 உயிரிழப்பு விபத்துகள் குறைந்துள்ளன. இதன் மூலம் கடந்த  ஆண்டுடன் ஒப்பிடும்போது இந்த ஆண்டு ஜூலை மாதம் வரை 570 உயிரிழப்புகள் குறைந்துள்ளது. 570 உயிர்கள் காப்பாற்றப்பட்டுள்ளன.

இதேபோல, இந்தாண்டு ஜூலை மாதம் வரை வேகமாக வாகனங்களை ஓட்டி சென்றதாக ஒரு லட்சத்து 5 ஆயிரத்து 97 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.  செல்போன்களில் பேசிக் கொண்டே வாகனங்களை ஓட்டி சென்றதாக இந்த ஆண்டு இதுவரை 2 லட்சத்து 31 ஆயிரத்து 624 பேர் மீது வழக்கு போடப்பட்டுள்ளது.

அதேபோல், குடிபோதையில் வாகனம் ஓட்டியதாக ஒரு லட்சத்து 13 ஆயிரத்து 777 பேர் வழக்கில் சிக்கி உள்ளனர்.

அதிக பொருட்களை ஏற்றி சென்றதாக 6 ஆயிரத்து 944 வழக்குகளும், சரக்கு வாகனங்களில் பயணிகளை ஏற்றி சென்றதாக 74 ஆயிரத்து 13 வழக்குகளும் பதிவாகி உள்ளது. இதேபோல், ஹெல்மெட் அணியாமல் மோட்டார் சைக்கிள் ஓட்டி சென்றவர்கள் மீதும், பின்னால் உட்கார்ந்து சென்றவர்கள் மீதும் மொத்தம் 35 லட்சத்து 78 ஆயிரத்து 760 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. மொத்தத்தில் இந்த ஆண்டு இதுவரை மோட்டார் வாகன சட்டத்தை மீறி வாகனங்களை ஓட்டியதற்காக 76.15 லட்சம் வழக்குகள் போடப்பட்டுள்ளது.

விதிகளை மீறி வாகனங்களை ஓட்டி சென்றதற்காக ஒரு லட்சத்து 82 ஆயிரத்து 375 பேர்களின் டிரைவிங் லைசென்ஸ்சை தற்காலிகமாக ரத்து செய்யுமாறு போக்குவரத்து துறைக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. அந்த பரிந்துரைகளை ஏற்று, 39 ஆயிரத்து 924 பேர்களின் டிரைவிங் லைசென்ஸ் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

    Advertisment

    Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

    Follow us:
    Advertisment