Advertisment

7,500 அமெரிக்க டாலர்; கட்டுக்கட்டாக இந்திய பணம்: வங்கதேச எல்லையில் சிக்கிய சேலையூர் எஸ்.எஸ்.ஐ.

சட்டவிரோதமாக எல்லையை கடக்க முயன்ற தமிழகத்தைச் சேர்ந்த சிறப்பு சப்- இன்ஸ்பெக்டர் ஜான் செல்வராஜ் கட்டுக்கட்டாக பணத்துடன் வங்கதேச ராணுவத்தால் கைது செய்யப்பட்டுள்ளார்.

author-image
WebDesk
New Update
TN policeman John Selvaraj SSI Selaiyur detained by Bangladesh army allegedly crossed border illegally Tamil News

வங்கதேச எல்லையில் கட்டுக்கட்டாக பணத்துடன் தமிழக காவல்துறையை சேர்ந்த அதிகாரி சிக்கியிருப்பது தமிழக போலீசார் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

Police | Bangladesh | சென்னை அடுத்த தாம்பரம் காவல் ஆணையரகத்திற்கு உட்பட்ட சேலையூர் காவல் நிலையத்தில் சிறப்பு சப்- இன்ஸ்பெக்டராக பணியாற்றியவர் ஜான் செல்வராஜ். இவர் நீண்ட காலமாக, நீதிமன்ற அலுவல் விவகாரங்களை பார்த்து வருகிறார். இதன் காரணமாக அவருக்கு பல குற்றவாளிகளுடன் நெருங்கிய பழக்கம் இருந்துள்ளது. 

Advertisment

இந்நிலையில், திருச்சியை சேர்ந்த ஜான் செல்வராஜ் மடிப்பாக்கத்தில், தங்கி சேலையூர் காவல் நிலையத்தில் சிறப்பு சப்- இன்ஸ்பெக்டராக வேலை பார்த்து வந்துள்ளார். அவர் அடிக்கடி நீண்ட நாட்கள் விடுமுறை எடுத்து வந்த நிலையில், மருத்துவ விடுப்பில் சென்றவர் தற்போது வங்கதேச ராணுவத்தில் பிடிபட்டுள்ளார். இந்த சம்பவம் தமிழக போலீசார் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

காவல் நிலையத்தில் நீதிமன்ற அலுவல் விவகாரங்களுக்கு குற்றவாளிகளை அழைத்து செல்லும் பணியில் ஈடுபட்டிருந்தவர் சட்ட விரோத கும்பலுடன் தொடர்பா? என போலீஸ் விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடையே, ஜான் செல்வராஜ் குறித்த சில திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது. 

அதாவது, வங்கதேச எல்லையில் கைதான சேலையூர் எஸ்.எஸ்.ஐ 7,500 அமெரிக்க டாலர்களுடன் பிடிபட்டுள்ளார். அவரிடம் கட்டுக்கட்டாக இந்திய பணமும் இருந்ததாகவும், அதனால், அவருக்கு போதைப் பொருட்கள் கடத்தல், தங்கம் கடத்தல் கும்பலுடன் தொடர்பு இருக்கிறதா என்ற கோணத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது. 

மேலும், இதேபோல், பல பிரச்சினைகளில் சிக்கி 10 ஆண்டுகள் பணியில் இல்லாமல் இருந்த எஸ்.எஸ்.ஐ ஜான் செல்வராஜ் மீண்டும் பணியில் சேர்ந்துள்ளார். ஜான் செல்வராஜ் விவகாரம் தொடர்பாக தாம்பரம் மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் உயர் அதிகாரிகள் ஆலோசனையில் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது. 

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

 

Police Bangladesh
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment