Tamilnadu Pongal Gift Package: பொங்கல் பரிசுடன் முழு கரும்பு: விவசாயிகள் கோரிக்கையை ஏற்று ஸ்டாலின் உத்தரவு

விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று, இந்த ஆண்டு வழங்கப்படும் பொங்கல் தொகுப்பில் முழு கரும்பும் சேர்த்து வழங்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

TN Pongal Gift 2023: sugarcane added cm mk Stalin order
Pongal Gift Package

TN Pongal Gift Package: தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகைக்கு ஆயிரம் ரூபாயுடன், அரிசி, சர்க்கரை உள்ளிட்ட பொருட்கள் பொங்கல் பரிசு தொகுப்பாக வழங்கப்படும் என்று கடந்த 22 ஆம் தேதி தமிழக அரசு சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டது. இந்நிலையில், இந்த பரிசுத் தொகுப்பில் கரும்பு இடம்பெறாதது குறித்து பல தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மேலும், பொங்கல் பண்டிகைக்கு கருப்பை அரசு கொள்முதல் செய்யும் என்று நம்பி பயிரிட்டதாக விவசாகள் தெரிவித்து வந்தனர்.

இந்த நிலையில் பொங்கல் பரிசு தொகுப்புடன் கரும்பு வழங்குவது தொடர்பாக மூத்த அமைச்சர்களுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை நடத்தினார். சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள முகாம் அலுவலகத்தில நடைபெற்ற இந்த கூட்டத்தில் அமைச்சர்கள் துரைமுருகன், பெரியகருப்பன், சக்கரபாணி மற்றும் அரசு அதிகாரிகள் பங்கேற்றனர்.

இந்த கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் பெரியகருப்பன், ‘பொங்கல் பரிசு தொகுப்புடன் முழுக்கரும்பு வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்’ என்று தெரிவித்தார்.

தமிழ்  இந்தியன்  எக்ஸ்பிரஸின்  அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்  டெலிகிராம்  ஆப்பில்  பெறhttps://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Tamilnadu news download Indian Express Tamil App.

Web Title: Tn pongal gift 2023 sugarcane added cm mk stalin order

Exit mobile version