Advertisment

பொங்கல் பண்டிகை முன்னிட்டு அரசு பேருந்துகளில் ஒரே நாளில் 2.17 லட்சம் பேர் பயணம் - அரசு போக்குவரத்துக் கழகம்

பொங்கல் பண்டிகைக்கான விடுமுறை இன்று முதல் தொடங்குவதால், ஏராளமான பொதுமக்கள் சொந்த ஊர்களுக்கு படையெடுத்துள்ளனர்.

author-image
WebDesk
New Update
TNSTC special buses weekend miladi nabi holiday Tamil News

Tamilnadu pongal special bus

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அரசு சார்பில் இயக்கப்பட்ட பேருந்துகளில் 3,946 பேருந்துகளில் நேற்று (ஜன.12) ஒரே நாளில் 2.17 லட்சம் பேர் பயணித்துள்ளதாக தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது.

Advertisment

பொங்கல் பண்டிகைக்கான விடுமுறை இன்று முதல் தொடங்குவதால், ஏராளமான பொதுமக்கள் சொந்த ஊர்களுக்கு படையெடுத்துள்ளனர்.

மக்கள் சொந்த ஊர்களுக்கு வசதியாக சென்னையில் இருந்து வெள்ளிக்கிழமை (ஜன.12) முதல் தினசரி இயக்கப்படும் 2,100 அரசு விரைவு பேருந்துகளுடன், 4,706 சிறப்பு பேருந்துகளும் சேர்த்து 3 நாட்களுக்கு மொத்தம்11,006 பேருந்துகள் இயக்கப்பட இருக்கின்றன.

சென்னையில் இருந்து கோயம்பேடு, கே.கே.நகர், தாம்பரம், மாதவரம், பூந்தமல்லி, கிளாம்பாக்கம் ஆகிய 6 இடங்களில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது. இந்த இடங்களுக்கு செல்ல மாநகர போக்குவரத்து கழகம் சார்பில் இணைப்பு பேருந்துகளும் இயக்கப்பட்டது.

இதேபோல் திருச்சி, கோவை, மதுரை உள்ளிட்ட முக்கிய ஊர்களில் இருந்தும் பிற இடங்களுக்கு 8,478 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.

பேருந்துகள் இயக்கம் குறித்த தகவலை பெறவும், புகார் அளிக்கவும் 24 மணி நேரமும் செயல்படும் கட்டுப்பாட்டு அறை கோயம்பேட்டில் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் 9445014450, 9445014436 ஆகிய அலைபேசி எண்களையும் தொடர்பு கொள்ளலாம். தனியார் ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலிப்பது தொடர்பாக 1800 425 6151,044 – 24749002, 26280445, 26281611 என்ற இலவச எண்ணில் புகார் அளிக்கலாம்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Tamil Nadu
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment