scorecardresearch

தனியார் மருத்துவக் கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ் கட்டணம் உயர்வு

தமிழகத்தில் உள்ள 18 தனியார் மருத்துவக் கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ் படிப்புகளுக்கான கட்டணம் உயர்த்தி அறிவிக்கப்பட்டுள்ளது. 1 லட்சம் வரை உயர்த்தி கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

NEET

தமிழகத்தில் உள்ள 18 தனியார் மருத்துவக் கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ் படிப்புகளுக்கான கட்டணம் உயர்த்தி அறிவிக்கப்பட்டுள்ளது. பொது மருத்துவத்திற்கு எம்.பி.பி.எஸ் படிப்பும், பல் மருத்துவராக பி.டி.எஸ் படிப்பும் கற்பிக்கப்படுகிறது. மருத்துவம் படிக்க அரசு, தனியார் கல்லூரிகள் உள்ளன. மத்திய அரசின் நீட் நுழைவு தேர்வு தேர்ச்சி பெற்றப்பின் மாணவர்களின் மதிப்பெண்களுக்கு ஏற்ப கல்லூரிகளை கலந்தாய்வு முறையில் தேர்வு செய்யலாம். நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களிலும் மாணவர்கள் சேரலாம்.

அரசு கல்லூரிகளில் குறைந்த கட்டணத்தில் மருத்துவம் படிக்கலாம். அதேவேளையில் மதிப்பெண்கள் குறைவாக பெற்று மருத்துவம் படிக்க விரும்புபவர்கள் தனியார் கல்லூரிகளை தேர்வு செய்கின்றனர். தனியார் கல்லூரிகளில் ஆண்டுக்கு கட்டணம் வசூலிக்கப்படுகிறது. அந்த வகையில் தற்போது தனியார் கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ் படிப்பதற்கான கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. ரூ.35 ஆயிரம் முதல் ரூ.1 லட்சம் வரை கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் மாணவர்கள், பெற்றோர்கள் கவலை அடைந்துள்ளனர்.

தனியார் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீடு இடங்களுக்கான ஓராண்டு கட்டணம் ரூ.4.3 லட்சம் முதல் ரூ.4.5 லட்சம் என கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. நிர்வாக ஒதுக்கீடு இடங்களுக்கான, ஓராண்டு கட்டணம் ரூ.12.5 லட்சத்தில் இருந்து ரூ .13.5 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. வெளிநாடு வாழ் இந்தியர் இடங்களுக்கான, ஆண்டு கட்டணம் ரூ. 23.5 லட்சத்தில் இருந்து ரூ.24.5 லட்சமாக உயர்த்தி நிர்ணயிக்ப்பட்டுள்ளது. அதன்படி தமிழகத்தில் உள்ள 18 மருத்துவ கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ் படிப்புகளுக்கான கட்டணம் உயர்த்தி அறிவிக்கப்ட்டுள்ளது.

எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ் படிப்புகளுக்கான கட்டணம் உயர்வுக்கு பல்வேறு தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்து கட்டணத்தை குறைக்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளனர்.

அந்த வகையில் பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ், ” தனியார் மருத்துவக் கல்லூரி கட்டண உயர்வு அநீதியானது எனக் கூறியுள்ளனர். தனியார் மருத்துவக் கல்லூரிகளில் இப்போது வசூலிக்கப்படும் கட்டணமே ஏழை மற்றும் நடுத்தர மக்களால் எட்டிப் பிடிக்க முடியாதது எனும் நிலையில், அதை மேலும்
மேலும் உயர்த்துவது நியாயமற்றது. பணக்காரார்களுக்கு மட்டுமே மருத்துவக் கல்வி என்ற நிலையை அது உருவாக்கி விடும். இதற்கு தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழக அரசு கட்டண உயர்வை திரும்ப பெறுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று வலியுறுத்தி உள்ளார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Tamilnadu news download Indian Express Tamil App.

Web Title: Tn private medical colleges mbbs bds fee hiked